போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தனது தேர்தல் அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக்கிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,
ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நாடுகளின் கடமையாகும்.
அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எப்போதும் கூறி வந்திருக்கிறார் ஐ,நா பொதுச்செயலர் பான் கீ மூன் என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiwy.html
Geen opmerkingen:
Een reactie posten