தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவை வெற்று ஆவணங்களில் கையொப்பங்களை திரட்டியதாக குற்றச்சாட்டு!

கூட்டமைப்புடன் மைத்திரி இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்!– டிலான் பெரேரா
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 11:37.21 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்தள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
இரு தரப்பிற்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalp2.html
ஐ.நா மனித உரிமைப் பேரவை வெற்று ஆவணங்களில் கையொப்பங்களை திரட்டியதாக குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 11:42.10 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வெற்று ஆவணங்களில் கையொப்பங்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களை திரட்டும் நோக்கில் இவ்வாறு வெற்று படிவங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.
சாட்சியமளித்தல் குறித்த வெற்று ஆவணங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவ்வறாhன ஆவணங்களையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் நிலைமையில் விசாரணைகள் சுயாதீனமான முறையில் நடைபெறும் என்பதில் நம்பிக்கையில்லை என பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalp3.html

Geen opmerkingen:

Een reactie posten