மகிந்தரின் "மவுசு" என்ன சொல்கிறது: சிங்கள புலனாய்வு வழங்கியுள்ள தகவல் கசிந்துள்ளது !
[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 12450 ]
அரச புலனாய்வு பிரிவால் 12ம் திகதி, பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் பிரதிகளுடன் சமர்பிக்கப்பட்ட வாராந்த ஆய்வு அறிக்கையில், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 54% வாக்குகளுடன் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க மகிந்த வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 56% வாக்குகளில் முன்னிலை வகிப்பதாகவும், தெற்கு மற்றும் ஊவாவில் மகிந்தவின் மவுசு 55% த்தில் இருந்து 51% ஆக குறைவடைந்துள்ளதாகவும் அரச புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மத்திய, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மகிந்தவின் மவுசு 50% தத்தில் இருந்து 45% ஆக குறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மகிந்தரின் மவுசு ஆகவும் குறைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 46 ஆகவும் நுவரெலியாவில் 48 ஆகவும் மகிந்தடின் மவுசு குறைவடைந்துள்ளது. போன முறை அவர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவர் 65% வாக்குகளால் முன் நிலை வகித்தார். இதனை வைத்துப் பார்க்கும் போது இம்முறை மகிந்தர் ஒருவேளை வென்றால் கூட 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெல்ல முடியுமே தவிர பெரும்பாண்மையாக வெல்ல முடியாது என்பது நன்றாக புரிகிறது. இதில் தில்லு முல்லு செய்ய சீன இயந்திரங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1680.htmlகூகுளில் SEX என்ற வார்த்தையை அதிகாமாக தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது !
[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5700 ]
கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையே Sex என்ற வார்த்தையை கூகுளில் தேடிய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இதில் இந்தியா இரண்டாம் இடத்தையும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இது தான் மகிந்த சிந்தனையில் அவர் நிறைவேற்றி வைத்துள்ள பெரிய சாதனை என்று சொல்லலாம். விலைவாசி உயர்வு, வேலையில்லாமை போன்ற காரணங்களே சமூக சீர்கேடுகளையும் தூண்டி விடுகிறது.
மேலும் போதைப் பொருள் பாவனை மதுபான பாவனைகளும் அதிகரிப்பதால் ஏற்படும் விபரீதம் இவை எனலாம்.
http://www.athirvu.com/newsdetail/1682.htmlஇது தான் இயந்திரம்: வசமாக மாட்டிக்கொண்ட யோஷித ராஜபக்ஷ(புகைப்படங்கள் வெளியானது)
[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 17800 ]
கள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிட என சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட இயந்திரம், வெலிசர இராணுவ முகாமில் இருப்பதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. மகிந்தவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ கடமையாற்றும் கடற்படை முகாமிலேயே இந்த இயந்திரம் இருப்பதும், அதன் புகைப்படங்களும் சிங்கள ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
கடற்படையினருக்குச் சொந்தமான வெலிசர கடற்படை முகாமில் இதுவரை பொருத்தப்பட்டிருந்த இயந்திரம் ஒன்றை அகற்ற வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விசேட அச்சு இயந்திரம் ஒன்று பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முகாமின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இடம்பெறும் இடம் சாதாரண சிப்பாய்களுக்கு தடை செய்யப்பட்ட வலயமாகவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக பணியின் பொறுப்பாளராக ஒருவரை, மகிந்தரின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
எமக்கு இத்தகவலை வழங்கிய கடற்படை அதிகாரியின் மேலதிக தகவல்படி, இந்த அலுவலகத்தில் கள்ள வாக்குச்சீட்டு அச்சிட சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தால் அமைக்கப்பட்;டுள்ள விசேட பிரிவின் மூலம் எதிர்வரும் நாட்களில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திட்டத்தை நாவல பொது சந்தை கிணற்றிற்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடம் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன தொழிநுட்பத்தின் ஊடாக வாக்களிப்பு முடிவுகளை அறிவிப்பது தொடர்பான நடவடிக்கை இங்கு இடம்பெறவுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்...
இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியாவும் உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1679.htmlஇலங்கையில் 17 வயது மாணவர்களின் போக்கு: குடும்ப பெண் மீது பாலியல் ஷேஷ்ட்டை: வசமாக மாட்டிக்கொண்டார்கள் !
[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11990 ]
கண்டி பூவேலிக்கடை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், பகல் வேளையில் அத்து மீறி வீட்டினுள் பிரவேசித்த 17 வயது, 18 வயது மாணவர்கள் இருவர் அப் பெண் மீது பலவந்தமாக பாலியல் சேஷ்டை புரிய முற்பட்டுள்ளனர். பாடசாலை சீருடையுடன் வந்ததாகக் கூறப்படும் இம்மாணவர்கள் குறித்து அப்பெண் கண்டி பொலிஸ் நிலைய பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட இரு மாணவர்களையும் கைது செய்து நேற்று கண்டி நீதிமன்ற நீதிவான் ஏ. எம். டி. வசந்தகுமார முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
நீதிவான் இரு மாணவர்களையும் சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்துடன் மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
http://www.athirvu.com/newsdetail/1681.html
Geen opmerkingen:
Een reactie posten