[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 10:04.56 AM GMT ]
மொனராகலை, படல்கும்பர பகுதியில் தேர்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஜே.வி.பி குழு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தடுக்கச் சென்ற பொலிஸாரே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படல்கும்பர பிரதேச சபையின் தலைவர், பிரதி தலைவர் உள்ளிட்ட குழுவினரே தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்று ஜே.வி.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மோதலை தடுக்க முயன்ற பொலிஸார் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdevz.html
முன்னாள் விடுதலைப் புலிகள் தொடர்பில் மீளாய்வு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 10:52.55 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை, சமூகமயம் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் இதனூடாக கண்டறியப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வவுனியா புனர்வாழ்வு மையத்தில் 109 பேருக்கு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஒரு வருடகால பயிற்சிகளை முன்னெடுக்கும் இவர்கள் அடுத்தவருடத்தின் நடுப்பகுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீளாய்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜென்ரல் ஜகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev1.html
Geen opmerkingen:
Een reactie posten