துப்பாக்கிச்சூட்டில்! பொலிஸார் ஆபத்தான நிலையில்…
படல்கும்பர பிரதேச சபையின் தலைவர், பிரதி தலைவர் உள்ளிட்ட குழுவினரே தமது ஆதரவானர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்று ஜே.வி.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. மோதலை தடுக்க முயன்ற பொலிஸார் மீது ஆயுத தாரிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், மேலதிக விசாரணைகளைத் தாம் மேற்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/80416.html
போதையில் தம்புள்ளையில் பொலிஸார் அடாவடி
அவர்களுள் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்ப டுகிறது. நேற்று பிற்பகல் 3 மணிக்கே இச்சம்பவம் இடம்பெற் றுள்ளது. காலை 6 மணி முதல் மேற்படி 4 பொலிஸாரும் போதையில் ஆடிப்பாடிக் கூச்சல் போட்டுள்ளனர்.
பள்ளிக்குத் தொழ வந்தவர்களையும் கேலி செய்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்தது. இதன் உண்மையை அறிவதற்காக அந்த இடத்துக்கு வந்த தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரிக்கும் அந்த பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க் கம் ஏற்பட்டது. இதனால், போதையில் இருந்த பொலிஸார் அந்த பொலிஸ் அதிகாரியை சுடுவதற்கு முற்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்திலிருந்து 50இற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவழைக்கப்பட்டு போதையில் அட்டகாசம் புரிந்த 4 பொலிஸாரும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களுள் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான அனைத்துக் காட்சிகளும் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கமராவில் பதிவாகின. இந்தக் காட்சிகள் அனைத்தையும் பதிவுசெய்து கொண்ட பொலிஸார், பள்ளிவாசல் கணினியில் இருந்த அந்தக் காட்சிகளை முற்றாக அழித்துவிட்டனர் என்று பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர் சலீம்தீன், பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோரிடம் முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.
இதேவேளை, பள்ளிவாசலில் பாதுகாப்பாக மாறி மாறி நியமிக்கப்படும் பொலிஸார் இரவு நேரங்களில் பள்ளிவாசலுக்குள் காலணிகளுடன் நடமாடுகின்றனர் என்றும் தொழுகை அறைகளில் தூங்குகின்றனர் என்றும் சலீம்தீன் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு இரண்டு மாதங்களுக்க முன் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வேறு பொலிஸார் மூவர் தம்புள்ளை பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகனவிடம் வினவியபோது, தம்புள்ளையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பதிலளித்தார்.
http://www.jvpnews.com/srilanka/80419.html
விஜய் முருகதாஸை மிரட்டும் லைகா…
விஜய்யையும் முருகதாஸையும் லைகாகாரர்கள் மிரட்டிட்டார்களாமே! எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது.
இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம். இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!
Oneindia Tamil
http://www.jvpnews.com/srilanka/80422.html
Geen opmerkingen:
Een reactie posten