தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

களுவாஞ்சிக்குடியில் உள்ள மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்!

கோத்தபாயவை அரசியலுக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை! - ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மேலும் மூவர் நியமிக்கப்படலாம் - ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 11:32.04 PM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு அழைப்பதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலில் பிரவேசிக்குமாறு கடந்த தடவை நான் விடுத்த கோரிக்கையை கோத்தபாய நிராகரித்திருந்தார்.
கோத்தபாய ராஜபக்ச ஓர் சிறந்த திறமையான பாதுகாப்புச் செயலாளராகும்.
அரசியலில் மட்டுமன்றி அமைச்சு செயலாளர் பதவிகளிலும் திறமையானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதனால் கோத்தபாயவை மீளவும் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த தடையாக அமையாது – ஜனாதிபதி
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு மேற்கொள்ள உள்ள விஜயம்ää ஜனாதிபதி தேர்தலை நடாத்த தடையாக அமையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்காக தேர்தல் தினங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு வத்திக்கான் கோரவில்லை. இலங்கை கத்தோலிக்கச் சபையும் அவ்வாறான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.
பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும் அவரது இலங்கை விஜயத்திற்காகää தேர்தல்களை நடத்தக் கூடாது என வத்திக்கான் கோரியதாக சில ஊடங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை.
ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் தினத்தை அரசாங்கம் தீர்மானிக்கும். எதிர்க்கட்சித் தலைவருக்கு தேவையென்றால் தேர்தல்களை முன்கூட்டியே நடாத்த முடியும்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்யுமாறு கோருகின்றனர். நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையை அறிமுகம் செய்யவில்லை.
அறிமுகம் செய்த கட்சியே இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோருகின்றனர். நான் தேவையற்ற வகையில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதில்லை.
இன்று நிறைவேற்று அதிகாரத்தை செய்யுமாறு கோரி வரும் கட்சியே அன்று நிறைவேற்று அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தியிருந்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மேலும் மூவர் நியமிக்கப்படலாம் - ஜனாதிபதி
காணாமல் போனேர் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலும் மூவர் நியமிக்கப் படலாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 3 இல் இருந்து 6 ஆக அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஆலோசனைக் குழுவினர் விசாரணைகள் எதிலும் பங்களிப்பு செய்யமாட்டார்கள், ஆலோசனைகளை மாத்திரம் வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து வெளியான கட்டுரை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் கடும் எதிர்ப்பை உருவாக்கிய இந்தக் கட்டுரை குறித்து ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தான் கோரி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcew0.html
அமைச்சர் ராஜித, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவுகிறார்- குற்றஞ்சாட்டும் பொது பல சேனா தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 11:52.25 PM GMT ]
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடமும் அவர் தொடர்பில் முறையிடவுள்ளதாக பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இதற்கான போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
அண்மையில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொது பல சேனாவே காரணம் என்று அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்தே பொது பல சேனா அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகி;றது.
நோர்வே தமது உதவி செய்வதாக அமைச்சர் வெளியிட்ட குற்றச்சாட்டை கலகொட மறுத்தார்.
பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென்னிலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சரின் வாகனத் தொடரணி செல்லும் போதே பயணிக்கிறது. அந்த வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.
அதேவேளை புத்தளத்திலும் கடலட்டை ஏற்றுமதி செய்யும் ஒருவர், அமைச்சரின் நண்பராக இருக்கிறார். அவர் அமைச்சர் வெளிநாடு செல்லும் போது செல்கிறார். குறித்த வர்த்தகரின் சகோதரர் அண்மையில் போதைப்பொருள் பிரச்சினை ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை கொண்டிருந்தார் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார்.
அத்துடன் அமைச்சர் ராஜிதவை மரியாதை குறைவாகவும் கலகொட அத்தே இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விமர்சித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcew1.html
களுவாஞ்சிக்குடியில் உள்ள மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்!
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 12:17.54 AM GMT ]
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ளதாக கூறப்படும் பாரிய மனிதப் புதைகுழியை தோண்டும் பணிகள் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் தரப்பு இதனை தெரிவித்துள்ளது.
இந்த மனித புதைகுழியில் 1990ம் ஆண்டு கொல்லப்பட்ட 160 முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த புதைகுழி தோண்டப்படவிருந்த போதிலும் ஒரு முறைப்பாடு மாத்திரமே தமக்கு கிடைத்துள்ளதாக காத்தான்குடி நீதிமன்றத்துக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸார் கடந்த ஜூலை முதலாம் திகதி அறிவித்தமையை அடுத்து அந்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
எனினும் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இந்த புதைகுழி தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி புதைகுழி தோண்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை மத சம்பிரதாய கிரியைகளுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcew2.html

Geen opmerkingen:

Een reactie posten