[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 12:28.44 AM GMT ]
பாரியளவிலான வட்டிக்கு அரசாங்கம் பெருமளவில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அரசாங்க வருமானம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. 1977ம் ஆண்டில் 24 வீதமாக காணப்பட்ட அரச வருமானம், இன்று 12 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய வருமான வரித் திணைக்களத்தின் நேரடி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மறைமுக வருமானம் அதிகரித்துள்ளது. நேரடி வருமானத்தை உயர்த்திக்கொள்வதே சிறந்த பொருளாதார வழிமுறையாகும்.
மறைமுக வரிகளின் மூலம் அரசாங்கம் பொதுமக்கள் மீது பாரியளவில் வரிச் சுமையை திணிக்கின்றது.
நாட்டில் 2 வீதமானவர்கள் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வரும் நிலையில், ஏனையவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதிலும் 4 வீதமானவர்கள் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியாளர்களின் நலன்களை அடிப்படையக் கொண்டே பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு இருக்கும் காணி உரிமை கூட ஊவா மக்களுக்கு கிடையாது – ஐ.தே.க
வடக்கு மக்களுக்கு இருக்கும் காணி உரிமை கூட ஊவா மக்களுக்கு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரம் பாரிய பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் அவர்களினால் காணி ஒன்றைக்கூட கொள்வனவு செய்ய முடியவில்லை. விவசாய பூமியில் மூன்றில் ஒரு பகுதியில் கூட ஊவா மாகாணத்தில் விவசாயம் செய்யப்படவில்லை.
நில்கல போன்ற நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதனால் இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளது.
அரசாங்க வாகனங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.
ஊவா மாகாணத்தில் வறிய மக்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்படுகின்றது என எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஊவாவில் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – சந்திரசேகரன்
ஊவா மாகாணசபையில் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் எல்லா பகுதிளிலும் இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஊவா தேர்தலை இனவாத அடிப்படையில் வெற்றிகொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இந்த முயற்சி வெற்றியளிக்க வாய்ப்பில்லை. சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பது வேறு யாருமன்றி அரசாங்கமே.
ஜே.வி.பி கட்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களுக்காகவே குரல் கொடுக்கும்.
இன முரண்பாடுகளை ஏற்படுத்த அரசாங்கம் சில காலங்களாகவே முயற்சித்து வருகின்றது.
இரண்டு ஆண்டுகளாகவே முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பே இதற்கான காரணமாகும்.
அரசாங்கத்தின் பொருளாதார சமூக கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
மாற்றமொன்று அவசியம் என சிங்கள. தமிழ் முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள் என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமரை கடுமையாக விமர்சிக்கும் தேசிய சங்க சம்மேளனம்
கண் பார்வை, செவிப்புலன் மற்றும் ஞாபக சக்தியுடைய ஒருவரையே பௌத்த சாசன அமைச்சராக நியமிக்க வேண்டுமென தேசிய சங்க சம்மேளனம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளது.
பௌத்த மஹா பேரவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பௌத்த சாசன அமைச்சர் டி.எம். ஜயரட்ன, பௌத்த மதத்திற்காக எதனையும் செய்யவில்லை என தேசிய சங்க சம்மேளனத்தின் அமைப்பாளர் பெஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தின் அபிவிருத்திக்காக எதுவும் செய்யப்படவில்லை. மாறாக மாநாயக்க தேரர்களை பிரதமர் விமர்சனம் செய்து வருகின்றார்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை தடுக்க தனியான நீதிமன்றமொன்றை அமைக்க ஜனாதிபதியும் பொலிஸ்மா அதிபரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறும் தேர்தல் பிரச்சார நாடகமாக அமைந்து விடக் கூடாது.
நாட்டின் அபிவிருத்தியுடன் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் டி.எம். ஜயரட்னவை ஓரம் கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பாரிய நட்டமடைந்த நிறுவனங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதன்மை
இலங்கையின் அரசத்துறையில் 2013 ஆம் ஆண்டு பாரிய நட்டங்க.ள் அடைந்த நிறுவனங்களாக பெற்றோலிய கூட்டுத்தாபனம், மிஹின் எயார், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் என்பன வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களுக்கு இடையிலான நாடாளுமன்றக்குழு (கோப்) இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2013 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்தது என்று அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கோப் குழுவின் தலைவர் அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.
இதேபோன்றே மிஹின் எயார் மற்றும் மீன்பிடி கூட்டுத்தாபனம் என்பனவும் பில்லியன் ரூபாய்களில் நட்டம் அடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcew3.html
தடுப்பு முகாமில் உள்ள சிறுவர்களை விடுவிக்கவும்!- ஆஸி. அரசிடம் கிறிஸ்தவ தேவாலயங்கள் கோரிக்கை
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 12:43.10 AM GMT ]
மேற்கு அவுஸ்திரேலிய கத்தோலிக்க தேவாலயங்களும், அகதிகளுக்காக பனி புரியும் நற்பணி அமைப்புக்களும் அடங்கிய அமைப்பு மத்திய அரசாங்கத்திடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவுஸ்திரேலியா செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
நீண்டகாலம் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதன் மூலம் பிள்ளைகள் மீது வரக்கூடிய உளவியல் தாக்கங்கள் பற்றி தமது குழு கரிசனை கொண்டுள்ளதாக கிறிஸ்தவ மத அமைப்பின் மேற்கு அவுஸ்திரேலிய திருச்சபைக்கான பதில் அமைப்பாளர் வணக்கத்திற்குரிய கென் வில்லியம்ஸ் அடிகளார் தெரிவித்தார்.
முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் பெற்றோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரையில், அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்குரிய சகல விதத்திலும் உதவியளிக்க தமது அமைப்பு தயாராக இருக்கிறதென அவர் கூறினார்.
கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலுள்ள பலர் தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், இந்தக் குழுவின் முன்னெடுப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சிறுவர்களது மன நிலைமைகள் தொடர்பாக அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முறைமையானது சித்திரவதைக்கு ஒத்த சூழ்நிலையை கொண்டிருப்பதாக அகதிகள் தொடர்பான பிரதான மனோதத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தொடர்பில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றிவரும் பீட்டர் யங்க் என்பவரே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர், இந்த முகாம்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்பதை கண்டறிய முடிகிறது என குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் சட்டவிரோதிகள் என கருதப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகள் நவுரு மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய இடங்களில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.
இந்த இடங்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்து வைக்கப்படும் போது அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்றும் பீட்டர் யங்க் குறிப்பிட்டுள்ளார்.
பிந்திய உத்தியோகபூர்வ தகவல்களின் படி ஜுலை 31 வரை பப்புவா நிவுகினி - மானஸ் தீவில் 1,127 அகதிகளும் நவுருவில் 1,146 அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
355 பேர் இந்த இடங்களில் இருந்து தமது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLcew4.html
Geen opmerkingen:
Een reactie posten