தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

இலங்கை பிரச்சினையில் இந்தியா மீண்டும் தலையிடும் நிலைமையை அரசாங்கமே ஏற்படுத்தியது- விக்டர் ஐவன்

அரசியலை விட்டு ஒதுங்கி வருமானம் பெறும் வழியை தேடுமாறு மனைவி கூறுகிறார்- லால்காந்த
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 08:00.18 AM GMT ]
அரசியலில் இருந்து ஒதுங்கி வருமானம் ஈட்டும் வகையில் எதனையாவது செய்யுமாறு தனது மனைவி தன்னிடம் கேட்டுள்ளதாக ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
மகரகமவில் நேற்று நடைபெற்ற உபுல் சாந்த சன்னஸ்கலவின் அம்மா என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குடும்ப செலவை தனியாக சமாளிக்க முடியாத காரணத்தினால், அரசியலில் இருந்து விலகி, வருமானம் பெறும் வழி குறித்து சிந்திக்குமாறு மனைவி என்னிடம் கேட்டுள்ளார்.
எனது மனைவியும் மகளும் தினமும் அதிகாலை 4 மணிக்கு நித்திரையில் இருந்து எழுந்து விடுவர், பகுதி நேர வகுப்புகளுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது.
எனது மகள் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கற்று வருகிறார்.
மனைவி ஆசிரியை, அவரது சம்பளம் போதுமானதல்ல, எனக்கு பணம் எதுவும் கிடைப்பதில்லை.
மனைவி தனியாக துன்பத்தை சுமந்தவாறு கடமைகளை முன்னெடுத்து வருகிறார், நான் எங்காவது நாடு முழுவதும் சென்றால், எமது தோழிகள், தோழர்கள் கொடுக்கும் அரிசி, தேங்காய் போன்றவற்றை வீட்டுக்கு கொண்டு போய் கொடுப்பேன், அதுவும் பயனில்லை.
நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு பிரச்சினைகள் உள்ளன, பலர் தமது பிரச்சினைகளை தீர்த்து கொள்கின்றனர்.
என்னால் முடியவில்லை, இதனால், ஏன் வெறுமனே பார்த்து கொண்டிருக்கின்றீர்கள் ஏதாவது செய்யுங்கள் என்று என் மனைவி கூறினாள். 30 வருடங்களாக ஜே.வி.பியின் முழு நேரமாக பணியாற்றி வருகின்றேன்.
இந்த 30 ஆண்டுகளில் 5 சதத்தையும் நான் சம்பாதித்ததில்லை எனவும் லால்காந்த தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo5.html

இலங்கை பிரச்சினையில் இந்தியா மீண்டும் தலையிடும் நிலைமையை அரசாங்கமே ஏற்படுத்தியது- விக்டர் ஐவன்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 07:59.56 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா மீண்டும் தலையிடும் சூழலை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகரும் ராவய பத்திரிகையின் ஆசிரியர் ஆலோசகருமான விக்டர் ஜவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரில் தோற்கடிக்கப்பட்டது வெளிநாட்டு இராணுவம் ஒன்றல்ல என்பதை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்தது சரியானது. எனினும் அது எமது நாட்டின் வேறு இனத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் மேற்கொண்ட கிளர்ச்சி. சிங்கள சமூகத்தில் இப்படியான இரண்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
இதனை புரிந்து கொள்ளாததால், அந்த இடைவெளியை சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல்வாதிகள் நிரப்பி கொண்டனர்.
போருக்கு பின்னர், என்றும் இல்லாதவாறு அரசாங்கம் செயற்பட்டது.
தமிழ் அரசியல்வாதிகளை சுவருக்குள் முடக்கும் கொள்கையை அரசாங்கம் பின்பற்றியது. இதனால், இந்தியா மீண்டும் தலையிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகள் இரண்டு பக்கத்தில் இருந்தும் பாதிப்புகளை அனுபவித்தவர்கள், போருக்கு பின்னரும் அவர்கள் அசௌகரியங்களை சந்தித்தனர்.
என்றுமில்லாத வகையில், முதல் முறையாக அவர்கள் எமது தேசிய கீதத்தை அவர்களின் மாநாடு ஒன்றில் தமிழில் பாடினர்.
ஆனாலும் அவர்களை அரசாங்கம் சுவர்களுக்குள் முடக்கும் கொள்கையை முன்னெடுத்தது.
இதனால் தலையீடும் செய்யும் நிலைமையை இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனவும் விக்டர் ஐவன் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo4.html

Geen opmerkingen:

Een reactie posten