தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஐஸ் வாளி சவால்- தயான் ஜயதிலக்க!



யுவதியிடம் அறை வாங்கிய இளைஞனின் பரிதாபம்: பிரச்சினையை பெரிதாக்கிய ஊடகங்கள்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 08:03.28 AM GMT ]
குருணாகல் வரியபொல பிரதேசத்தில் யுவதி ஒருவரிடம் அடிவாங்கிய 30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமாரின் குடும்பத்தின் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி, பிள்ளையை அழைத்துக்கு கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக செல்வா கூறியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், வாரியபொல விலாகட்டுபொத்த தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் செல்வாவின் வீட்டுக்கு ஊடக குழுக்கள் சென்றதால், இந்த பிரச்சினை பூதாகரமாக மாறியதாகவும் செல்வா குறிப்பிட்டுள்ளார்.
வாரியபொல பஸ் தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் உடல் தெரியும் அளவில் ஆடை அணிந்து சென்றமை குறித்து செல்வா கேள்வி எழுப்பியதால், அந்த யுவதி, செல்வாவை பலர் முன்னிலையில் பலமுறை கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் இணைய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdeo7.html
அச்சுவேலி தொழிற்பேட்டை 27 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 08:36.40 AM GMT ]
இலங்கை - இந்திய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் மீள்புனரமைக்கப்பட்டுள்ள அச்சுவேலி தொழிற்பேட்டை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
கைத்தொழில் பேட்டை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுவியாபார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்மூலம் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எட்டு பாரிய கம்பனிகள் தமது கைத்தொழில் மையங்களை அங்கு அமைத்திருக்கின்றன. ஒரு கம்பனிக்கு 25 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பேட்டைக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. ஏனையவற்றை குறித்த கம்பனிகளே செய்து கொள்ள வேண்டும்.
இதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் பேட்டையின் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே.சின்ஹா உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 http://www.tamilwin.com/show-RUmsyIRZLdepy.html
இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஐஸ் வாளி சவால்- தயான் ஜயதிலக்க
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 09:16.27 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் (ice bucket challenge )என அரசியல் விமர்சகரும் முன்னாள் ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலையில் குளிர்ந்த நீரை ஊற்றும் ஐஸ் வாளி சவால் என்றே நான் காண்கிறேன். இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்தில் ஐஸ் வாளியில் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அரசாங்கத்திடம் மண்டியிட்டு நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் வரும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில்லை என அரசாங்கம் எண்ணியது.
கூட்டமைப்பினர் யார் என்ற மமதையில் அரசாங்கம் இருந்தது. தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா, யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார். இதன் பின்னர் இந்திய பிரதமர் சந்தித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை பார்க்கும் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை போல் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காணப்பட்டது.
இதன் போது இலங்கையில் வீங்கி தலை மீது பிரதமர் மோடி ஐஸ் தண்ணீரை ஊற்றினார்.
நரேந்திர மோடி பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
எனினும் மோடி, மகிந்த ராஜபக்ஷவை அழைத்தார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டே இருந்தது.  அப்போது இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பமும் இருந்தது.
நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி 13வது திருத்தச் சட்டம் குறித்து நினைவுபடுத்தினார்.
ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிய குறித்து குறிப்பிடவில்லை. அதில் இருந்து சிறு விரசம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்திய அமைச்சரவை அமைச்சர் பதவியை வகிக்காத சுப்ரமணியன் சுவாமியை வரவழைத்து பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்ற செய்து, அவர் கூறிய விடயங்களை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என நம்ப ஆரம்பித்தது.
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடோ சுப்ரமணியன் சுவாமியின் நிலைப்பாடோ அல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமரை மாத்திரம் சந்திக்கவில்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தை சேர்ந்த எவரையும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இதுவரை சந்திக்கவில்லை. அயல் நாட்டுடன் மேற்கொள்ளும் தொடர்புகளில் குறித்த முகாமைத்துவத்தின் குறைபாட்டையே இது காட்டுகிறது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep0.html

Geen opmerkingen:

Een reactie posten