தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பொய்யன்! நிமல்கா

இலங்கை மீது பாயும் UN விசாரணைகள்

விசாரணைகளுக:கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விசாரணை நிபந்தனைகளை மாற்றி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டிக் கொள்வது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நம்பகமான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதென ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது. பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சாட்சியங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழுக்கள் பயன்படுத்திய நியதிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/80249.html

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பொய்யன்! நிமல்கா

சிங்கள, தமிழ் தாய்மார்களின் கண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் பெற்றோரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சாட்சியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எவரும் கருத்து வெளியிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதனை முடிந்தால் அரசாங்கம் நிரூபிக்கட்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்தரணியான வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். 1989ம் ஆண்டு காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரல் கொடுத்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கின் சிங்களத் தாய்மாருக்கு நட்ட ஈடு கிடைக்கப்பெற்றதாகவும், வடக்கின் தமிழ்த் தாய்மாருக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/80252.html

Geen opmerkingen:

Een reactie posten