தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம்: ஜனாதிபதி அமைச்சர்களுக்கு ஆலோசனை!

ஐ.தே.கட்சியின் எம்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 07:00.16 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கட்சியின் ஆலோசனைக் குழு அண்மையில் கூடி ஆலோசனைகளை நடத்தின.
இதனடிப்படையில், நாவலப்பிட்டி தொகுதியின் அமைப்பாளரான அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் சகோதரர் ஆனந்த அளுத்கமகேவையும், யட்டிநுவர தொகுதியின் அமைப்பாளராக மயந்த திஸாநாயக்கவையும், கொலன்னாவ தொகுதியின் அமைப்பாளராக எஸ்.எம். மரிக்காரையும் நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டதுடன் நியமனங்களும் வழங்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பில் பிறந்தநாள் வைபவம் களைக்கட்டியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்கவின் பிறந்த தினம் அன்று கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டி , கயந்த கருணாதிலக்கவுக்கு அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து கூறிய பின்னர், கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றைய தினம் அதிகாலை 5.30 அளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கயந்த கருணாதிலக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவே ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக கயந்தவை தொடர்பு கொண்டிருந்தார்.
வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட கயந்த கருணாதிலக்க, நீங்கள் பிறந்த நாள் தினத்திற்கு முன்னரே தொடர்பு கொள்வீர்களே என ஜனாதிபதியிடம் கூறினார்.
இதன் பின்னர் இருவரும் ஊவா மாகாண சபைத் தேர்தல் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdft2.html
ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசியலமைப்பில் மாற்றம் - அரசாங்கம் தீவிர நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:04.02 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்தக் கூடிய வகையில் அரசாங்கம் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் இந்த அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்சி தாவுவதனையும் அரசாங்கம் சட்ட ரீதியாக்கவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
கட்சி தாவுவதற்கு சட்ட ரீதியான அந்தஸ்தும் வழங்கப்பட உள்ளது. தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் கட்சி தாவ முடியாது.
எனினும், சில விசேட சந்தர்ப்பங்களில் கட்சி மாறுவதற்கு முடியும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdft6.html
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம்: ஜனாதிபதி அமைச்சர்களுக்கு ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:05.27 AM GMT ]
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மத அமைப்புக்களுடன் அமைச்சர்கள் மோதுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோதிக் கொள்வதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக் வாய்ப்புக்கள் அதிகமாககும்.
மத அமைப்புக்களுடன் வேலை செய்யும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும், மத அமைப்புக்கள் ஏதேனும் குற்றம் சுமத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
எனினும் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, பதிலளிக்கப் போனால் இந்தப் பிரச்சினை நீண்டு கொண்டே செல்லும்.
பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
அவர்கள் எல்லோரையும் விமர்சனம் செய்கின்றார்கள், அவர்களுக்கு பதிலளிக்க முயற்சித்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdft7.html

Geen opmerkingen:

Een reactie posten