தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

என் தற்கொலைக்கு காரணம் இலங்கை அரசே: மனமுடைந்த பெண்!



தமிழக முதல்வரை இழிவுபடுத்தி இலங்கை அரசின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் கட்டுரை வெளியானது.
இதனால் தமிழகத்தில் எதிர்ப்புகள் பல கிளம்பின. ஆனால் சேலத்தில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த நிலையில் சேலம் அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவர் ஜெயலலிதா மீதான அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான விஜய லட்சுமியால் முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது இலங்கை அரசு வெளியிட்ட அவதூறு கட்டுரையை பொறுத்து கொள்ள முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  அதன்படி அவர் நேற்று மாலை 3 மணியளவில் 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் அதிகாலையில் அவரது மகன் பார்த்த போது விஜயலட்சுமி மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. அவரை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விஜயலட்சுமியை சேலம் அரசு வைத்தியசாலையில் சேர்த்தார். அப்போது அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு வந்த பொலிஸார் விஜயலட்சுமி எழுதிய ஒரு பரபரப்பு கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது,
மாண்புமி முதல்வர் அம்மா அவர்கள் தமிழகத்துக்கும் தாய், எங்கள் குடும்பத்துக்கும் தாய். இந்தியா முழுவதும் அம்மாவை பெருமைப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் இலங்கை அரசு மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களையும், மோடி அவர்களையும் தவறாக சித்தரித்து இருக்கிறது.
இதற்கு இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இந்த பிரச்சினையால் நான் மனம் உடைந்து போய் விட்டேன். எனவே என் தற்கொலைக்கு காரணம் இலங்கை அரசு என்று அதில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfpz.html

Geen opmerkingen:

Een reactie posten