தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

இலங்கை கடற்படைக்கு எதிராக பாய்ந்தது வழக்கு!

இலங்கை குறித்து ஐ.நா பிரதிநிதிகள் சம்பந்தன் தலைமையிலான அணியுடன் பல சுற்றுப் பேச்சு

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பேருக்குப் பின்னர் இலங்கை உறுதியளித்த விடயங்கள் சரிவரக் கையாளப்படவில்லையென ஐ.நா.அதிகாரிக்கு எடுத்து விளக்கப்பட்டது.
குறிப்பாக, ஐ.நா.செயலாளர் பான் கி மூனுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் மூன்று முக்கிய விடயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போது இடம்பெற்றக் கூறப்படும் மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இலங்கையில் நீண்ட காலமாக நிலவிவரும் இன்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணுதல்.
ஆகிய மூன்று விடயங்களும் இலங்கை அரசால் பொறுப்பான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர். அத்துடன், வடக்கு மாகாண சபையைச் சுதந்திரமாக இயக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வடபகுதியிலுள்ள காணிகளை அரசு கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், இராணுவத் தலையீடுகளால் மக்களுக்கு ஏற்படும் நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ.நா.அதிகாரிக்கு விளக்கினார்.
இந்தச் சந்திப்பு நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/74141.html

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையா சஜித்தின் கவலை


இந்த அரசாங்கம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என அவர் கூறினார். அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதனை செய்யத்தவறின் எமது நாடு தீ மலையாக மாறும் எனவும் சஜித் குறிப்பிட்டார்.


மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டில் ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இன, மத பேதம் இன்றி சகல பிரஜைகளும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என சஜித் குறிப்பிட்டார்.Colombo-MuslimColombo-Muslim-02Colombo-Muslim-01Colombo-Muslim-03Colombo-Muslim-04Colombo-Muslim-06Muslims-Sri-LankaBananthurai-01Bananthurai-02Bananthurai-03Bananthurai-05Bananthurai-04Bananthurai-08Bananthurai-07Bananthurai-06
http://www.jvpnews.com/srilanka/74144.html

இலங்கை கடற்படைக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

படகுகள் உடைந்து கடலில் மூழ்கியதால் அதில் இருந்த மீனவர்கள் சீரிஸ், பாஸ்டன், ஜான்பால், கீதன், சென்ரின் ஆகியோர் கடலில் குதித்து தத்தளித்தனர். அவர்களை மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் உடைந்த படகின் உரிமையாளராக பவியான், சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகளிடமும், மண்டபம் கடற்கடை பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். இதன் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் மரைன் பொலிஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது, ஆயுதங்களை காட்டி மிரட்டியது, மீனவர்களை கொலை செய்ய முயற்சித்தது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74148.html

Geen opmerkingen:

Een reactie posten