தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

புலனாய்வுப் பிரிவு பற்றிய தகவல்களை வெளியிடவில்லை: மங்கள - கைது செய்யுங்கள் பாருங்கள்: ஐ.தே.கட்சி சவால்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு: நீதவானையும் சாட்சியமளிக்க வருமாறு அறிவிப்பாணை
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:38.23 AM GMT ]
தற்கொலை தாக்குதல் நடத்தி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் தர்ஷிகா விமலசிறிக்கு அறிவிப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டப்பட்டது.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை தற்போது மறுத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட போது, நீதிமன்றத்தில் மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றியவர், எழுதுவிளைஞராக பணியாற்றியவர், அப்போது அந்த இடத்தில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரையும் சாட்சியமளிக்க வருமாறு மேல் நீதிமன்றம் அறிவிப்பாணை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnx3.html
புலனாய்வுப் பிரிவு பற்றிய தகவல்களை வெளியிடவில்லை: மங்கள - கைது செய்யுங்கள் பாருங்கள்: ஐ.தே.கட்சி சவால்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 12:03.08 PM GMT ]
போர் நடைபெறாத நாட்டை எப்படி ஆட்சி செய்வது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட சர்வமத கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாத கலவரங்களை ஏற்படுத்தி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியில் அமரும் கனவை நனவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.
நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் அவர்களுக்கு சம்பந்தமில்லாத பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அத்துடன் நான் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களை வெளியிடவில்லை.  அதில் உள்ள முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களையே வெளியிட்டேன்

யுத்தம் மற்றும் கலவரங்கள் இல்லாத நாடு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆட்சி செய்யத் தெரியாது.

அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் போர் முடிந்து 5 வருடங்களை நோக்கும் போது மாற்றங்கள் எதனையும் காணமுடியவில்லை.

பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு வந்தாலும் பெண்கள் வாழ்க்கை செலவுக்காக தனியான யுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.  நாட்டில் கொள்ளை, வன்முறை, ரவுடித்தனம் நாட்டை அரசாண்டு வருகிறது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீரவை கைது செய்யுங்கள் பாருங்கள்: ஐ.தே.கட்சி சவால்
அரச இரகசியத்தை வெளியிட்ட தவறை செய்திருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை உடனடியாக கைது செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மங்கள சமரவீர தவறு செய்துள்ளார் என்று கடை கடையாகவும் இடத்திற்கு இடமும் கூறி கொண்டிருக்காது அவரை கைது செய்யுங்கள்.
மங்கள சமரவீர நாடாளுமன்றத்திற்கு வெளியில் வெளியிட்ட கருத்து நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் உள்ளடங்காது.
அத்துடன் அவர் வெளியிட்ட தகவல் தொடர்பில் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஊடக சந்திப்பொன்றில் புலனாய்வுப் பிரிவின் மூன்று அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டமை குறித்து பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்திய இராணுவப் பேச்சாளர், மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு ஈடான காட்டிக்கொடுப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக கூறியிருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இந்த காட்டிக்கொடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவப் பேச்சாளர் ஊடக சந்திப்பை நடத்திய அன்றைய தினம் மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட மங்கள சமரவீர, மூன்று அரச புலனாய்வு அதிகாரிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் இந்த அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த தகவலை வெளிட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, நாட்டின் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் பாரிய குற்றத்தை இழைத்திருப்பதாக கூறி பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று விடுத்திருந்த ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்ததது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnx4.html

Geen opmerkingen:

Een reactie posten