தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

தலைவரை வைத்து வியாபாரம் பேசும் இவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள் ?

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வைத்து பாரிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். எனக்கு அவரை தெரியும் ! நான் பல தடவை அவரைச் சந்தித்து உள்ளேன் ! அவரும் நானும் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை பேர் கிளம்பப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வரிசையில் தற்போது நாடு கடந்த அரசின் பிரதமரும் இணைந்துவிட்டார் என்பது தான் கவலைக்குரிய விடையம். சமாதான கலப்பகுதியானாலும் சரி அதற்கு முந்திய காலப்பகுதியானாலும் சரி, ஈழத்திற்கு சென்று நூறுக்காணக்கானவர்கள் தலைவரைச் சந்தித்துள்ளார்கள் என்பது பலரும் அறிந்த விடையம். இவர்களில் பலர் தேசிய தலைவருக்கு மிக மிக நெருக்கமானவர்கள். மேலும் சிலர் புலிகளுக்கு பாரிய உதவிகளை புரிந்தவர்கள். அவர்கள் இன்றும் கூட தன்னடக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நாடு கடந்த அரசு மக்கள் மத்தியில் செல்வாக்கை வெகுவாக இழந்து வருகிறது. இன் நிலையில் செவாக்கை உயர்த்த இவர்கள் கையாளும் யுக்தியே இந்த தேசிய தலைவர் எனது நண்பர் என்று, புராணம் பாடுவது ஆகும். மக்கள் தேசிய தலைவர் மீது மிகுந்த பற்றுடையவர்களாக இருக்கிறார்கள். (அது அவரை தானாகவே தேடி வந்த விடையம்). ஆனால் அவர் என் நண்பர், என்று சொல்வதால் மக்கள் உங்களையும் அப்படிப் பார்பார்கள், என்று நீங்கள் நினைப்பது அடி முட்டாள் தனமான விடையம். "தலைவரை தனிப்பட சந்திக்கவில்லை! நடந்தது என்ன? விளக்குகிறார் உருத்திரகுமார்" என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் இன்று வெளியாகியுள்ளது. பல விடையங்களை பேசினோம் என்று ருத்திரா கூறியுள்ளார். ஆனால் நாடு கடந்த அரசு ஒன்றை ஆரம்பிக்கட்டுமா ? என்று ருத்திரா கேட்டவேளை "அது தேவையில்லை" என்று தேசிய தலைவர் சொன்னாரே அதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட ருத்திரகுமார் கூறவில்லையே ? ஏன் ?
இது இவ்வாறு இருக்க, இந்த நாடு கடந்த அரசு வருங்காலங்களில் என்ன செயல் திட்டத்தில் உள்ளார்கள் என்பது தொடர்பாக இவர்கள் என்றும் விளக்கம் கொடுப்பது இல்லை. ஒரு 5 ஆண்டு திட்டம், இல்லை குறைஞ்சது 2 ஆண்டு திட்டம் என்று இவர்கள் கைகளில் ஒன்றுமே இல்லை. அவ்வப்போது நடக்கும் சமகால அரசியலில் தாமும் பங்குபற்றிச் செல்கிறார்கள் அவ்வளவு தான். லண்டனில் பெண்கள் தினம் நடந்தால் அதில் பங்கு பற்றிவிட்டு, நாடு கடந்த அரசு பங்குபற்றியது என்கிறார்கள். வெள்ளை இனத்தவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டால் மட்டும் தமிழீழம் கிடைத்துவிடுமா ? அன்று போராட்டம் நடந்தது. இன்று என்ன நடக்கிறது ? வாய்ச்சொல் போராட்டம் தான் நடக்கிறது. தேசிய தலைவருக்கும் தான் அன்று எம்.ஜீ.அரை(MGR) தெரிந்து இருந்தது. அவர் என்ன அடிக்கடி எனக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்று சொன்னாரா ? இல்லையே !
ஒரு லட்சியத்தை கையில் எடுத்தார். அதற்காக போராடினார். அந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரையே திரும்பி பார்கவைத்தார். மேடையில் பேசி பேசி கூட்டம் சேர்க்க நினைத்தால், அது என்றாவது ஒரு நாள் காணமல் போய்விடும். லட்சியம் ஒன்றுக்காக அர்பணிப்புடம் போராடினால், நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம். இதுவே தாரக மந்திரம் ஆகும்.
அதிர்வுக்கான: வல்லிபுரத்தான்.
http://www.athirvu.com/newsdetail/311.html

Geen opmerkingen:

Een reactie posten