இலங்கை தமிழர்கள் 152 பேர் பாண்டிச்சேரி கரையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றமைக்கான எவ்வித ஆதாரங்கள் இல்லை என்று இந்திய கரையோரப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை அண்மித்து கொண்டிருப்பதாக கூறப்படும் 152 இலங்கை அகதிகள் அடங்கிய படகு தொடர்பில் தற்போது கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் அகதி ஒருவரை கோடிட்டு இந்த படகு இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து ஜூன் 13 ஆம் திகதி புறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் விசாகப் பட்டிணத்தில் இருந்து அகதிகள் குழு ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவிருந்தநிலையில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போது அகதிகள் பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான மனிதக் கடத்தல் சம்பவம் குறித்து ஒரு மாதத்துக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடல் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டதாக பாண்டிச்சேரி கரையோர பொலிஸ் அத்தியட்சகர் ஏ நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அகதிகள் படகு ஒன்று புறப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp6.html
Geen opmerkingen:
Een reactie posten