தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

கனடாவில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குடியேற்றவாசியான தமிழர்

கனடாவில் தமிழ் இளைஞனைக் கைது செய்ய தயாராகும் இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட, கனடாவில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸார் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

கனகராஜா ரவிசங்கர் என்ற இந்த சந்தேக நபர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடிவிராந்து பிறப்பித்திருந்தது. வவுனியா பகுதியைச் சேர்ந்த கனகராஜா ரவிசங்கர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1996, 97 மற்றும் 99ம் ஆண்டுகளில் அவர் மூன்று தடவை இவ்வாறு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே வவுனியா நீதிமன்றம் அவருக்கு பிடிவிராந்து பிறப்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் 2005ம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவுக்கு தப்பி சென்றதாகவும், எனவே அவரை கைது செய்ய கனடாவிடம் உதவி கோரி இருப்பதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்டர்போல் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பித்துள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர், கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Kanagarajah Ravishankar
http://www.canadamirror.com/canada/28067.html#sthash.mtlDHzRU.dpbs

கனடாவில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குடியேற்றவாசியான தமிழர்

கனடாவின் சிறந்த குடியேற்றவாசிகளாக 25 பேர் ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.

canadian immigration சஞ்சிகையானது இதனை மேற்கொண்டு வருகின்றது. பிற நாடுகளிலிருந்து கனடாவிற்கு குடியேறி, கனடாவில் ஏதாவது ஒரு துறையில் தனி முத்திரை பதித்து நாட்டில் உள்ள பலருக்கும் முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இ்நத விருது வழங்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விருது பெறுவதற்கு சமூக சேவை, கலை, தொழில் உள்ளிட்ட எந்த பிரிவினையும் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் 2014ஆம் ஆண்டின் RBC Top 25 Canadian Immigrant விருதில் தமிழரான செந்தி என்பவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கான தேர்வில் 635 பேர் பங்கு கொண்டனர். அதில் 75 பேர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, அதிலும் 25 பேர் மட்டுமே வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செந்தி என்பவர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
றோயல் பேங்க் ஒப் கனடாவால் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் கனடாவிற்கு வந்து தொழிற்துறையில் சாதனை படைத்தோர், சிறந்த மனித நேயப் பண்பாளர்கள், சிறந்த கலைநயம் மிக்கவர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பலருக்கு வழங்கப்பட்டுள்ளன.
senthi_canada_001
senthi_canada_002
senthi_canada_003
senthi_canada_004
http://www.canadamirror.com/canada/28114.html#sthash.BS9edZ4z.dpbs

Geen opmerkingen:

Een reactie posten