தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

ஈழத்தமிழர்களிற்கு விடிவைப் பெற்றுத் தர இலங்கையிலுள்ள புத்த பிக்குகளால் மாத்திரமே முடியும்!

இலங்கையில் முஸ்லிம் மக்களிற்கு எதிராக  அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியத் தலையங்கத்தை வெளியிட்டிருந்தது.
எனவே இதுபற்றிய ஒரு ஆய்வை மேற்கொள்வதற்காக கனடாவிலுள்ள நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுதர்மா அவர்களை லங்காசிறி வானொலி நேரடியாக இணைத்திருந்தது.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,
பௌத்தம் ஆட்சியை நடாத்தும் அதிகார ஊடகமாக, எந்தவிடயத்திலும் ஆலோசனைக்கு நாடப்படும் அல்லது முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாகவே இலங்கையில் செயற்பட்டு வருகிறது.
இலங்கையில் பின்பற்றப்படுகின்ற தேரவாத பௌத்தத்தின் சில சிதறல்கள் பாராளுமன்ற அரசியலிற்குள் உள்நுழைந்ததே இப்போதைய பிரச்சினைக்கு காரணம். ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து பிரிந்ததே இந்தப் பொது பலசேனா அமைப்பு.
அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராவண்ண என்ற இந்த நான்கு பௌத்தபீடங்களின் அதிபதிகளும் அவர்களைப் பின்பற்றும் 35,000த்திற்கும் மேற்பட்ட பிக்குகளும் தான் இலங்கையின் வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்களாக மாறிவிட்டார்கள்.
இவர்களால் மகிந்தவைப் பதவியில் வைத்திருக்கவும் முடியும். தூக்கியெறியவும் முடியும். அதேபோல சிறுபான்மை மக்கள் மீது இவர்கள் மேற்கொண்ட வன்முறைகளே தீர்வு வழிமுறைகளை மாற்றின.
இதனால் பிக்குகளின் வன்முறைகள் மற்றும் உணர்ச்சி அரசியல் எழுச்சிகளை சிங்கள மக்கள் நம்புகிறார்கள். தமிழர்களிற்கு தீர்வு கொடுத்தால் சிங்களவர்கள் கடலில் தான் குதிக்க வேண்டும் என்ற அடிப்படையற்ற பிக்குகளின் பயத்தை சிங்களவர்கள் நம்புகிறார்கள்.
பிக்குகளின் இனவாத வன்முறைகளே 1983ல் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது. இப்போதைய பிக்குகளின் வன்முறை புதிய பரிணாமத்தைத் தோற்றுவிக்கும் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls2.html

Geen opmerkingen:

Een reactie posten