தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

வவுனியா மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாமல் தடுத்த இராணுவம்!



இலங்கைக்கும் சீஷெல்சிற்கும் இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 06:02.39 AM GMT ]
இலங்கைக்கும் சீஷெல்சிற்கும் இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அரசியல் ஆலோசனை, சுற்றுலாத்துறை, கலாச்சார ஒத்துழைப்பு, மின்சாரத்துறை, தொழில்நுட்பம், முதலீட்டு ஊக்குவிப்பு போன்ற பல்வேறு துறைகளில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீஷெல்சிற்கான இலங்கைத் தூதரகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக சீஷெல்சில் அரச வங்கி, மிஹின் லங்கா மற்றும் காப்புறுதி நிறுவனமொன்று ஆகியவற்றின் கிளைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் ஒன்றிணைந்த ஆணைக்குழு ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw2.html

வவுனியா மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாமல் தடுத்த இராணுவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 07:23.41 AM GMT ]
இராணுவத்தினரும் பௌத்த பிக்கு ஒருவரும் சேர்ந்து வவுனியா இந்து மயானத்தில் சடலமொன்றை தகனம் செய்ய தடைவிதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, கொக்குவெளி வீதியில் அமைந்துள்ள பேயாடிகூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலமொன்றைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மயானத்திற்கு வந்த இராணுவத்தினர், குறித்த காணி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இங்கு சடலத்தை எரியூட்டமுடியாது என்றும் கூறி தடுத்துள்ளனர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சற்று நேரத்தின்பின் அப்பகுதியின் கிராமசேவகர், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
காலம் காலமாக இந்த பகுதியில் மயானம் இருந்தது என்றும், அந்த இடத்தில் எரியூட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் இராணுவத்தினருடன் கலந்துரையாடினர்.
இதனால் அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் கலைந்து சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw5.html

Geen opmerkingen:

Een reactie posten