தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

இன வன்முறைகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: முஸ்லிம் பேரவை வரவேற்பு!

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 03:36.08 AM GMT ]
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் இலங்கை, மாலைத்தீவு மற்றும் மலேசியாவினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளது.
தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தமிழக பொலிஸார் இது தொடர்பான விசாரணையை இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்தின் ஊடாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியது.
இதனையடுத்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் இலங்கை, மாலைதீவு மற்றும் மலேசியாவுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp7.html
ஐ.நா விசாரணைக் குழு எந்தவொரு சம்பளமும் பெறாமல் தொண்டு அடிப்படையில் பணி
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 05:16.40 AM GMT ]
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயும் குழு தொண்டு அடிப்படையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த விசாரணைக் குழுவை நியமித்திருந்தது.
அந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறான செயற்பாடுகளில் அனுபவம் மிக்க, வல்லுநர்கள் மூவர் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
அந்தக் குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும்.
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் ஜனாதிபதியுமான மார்ட்டி அத்திசாரி, நியூஸிலாந்தின் முன்னாள் ஆளுநர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
இந்த மூன்று வல்லுநர்களும் இந்தப் பணிகளைத் தொண்டு அடிப்படையிலேயே மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பணிகளுக்காக எதுவித வேதனமும் அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவர்கள் விசாரணைக் குழுவின் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்குபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblqz.html
இன வன்முறைகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: முஸ்லிம் பேரவை வரவேற்பு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 06:10.53 AM GMT ]
சமூக இணையத்தளங்களைப் பயன்படுத்தி இன வன்முறைச் சம்பவங்களை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் இந்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் தீர்மானமானது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், இந்தத் தீர்மானம் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
சமூக வலையமைப்புக்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது இந்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென முஸ்லிம் பேரவை, பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளது.
பேருவளை அலுத்கம சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கூடிய விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq1.html

Geen opmerkingen:

Een reactie posten