18வது அரசியல் திருத்தத்தால் நீதித்துறைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கின்றது!- சீ.வி.விக்னேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:45.09 PM GMT ] [ பி.பி.சி ]
நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்களையோ நீதிபதிகளையோ விமர்சனம் செய்ய முடியாது. அவர்களைக் குறை கூறுவதும் தமது நோக்கமல்ல என தெளிவுபடுத்திய அவர், 18வது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.
இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல்வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்ற வகையில் நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo2.html
வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:19.08 PM GMT ]
தென்பகுதியில் பௌத்த இனவாதிகளால் அழிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சீரமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியதாக அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரி டி.எல். ஜெயலால் தெரிவித்துள்ளார்.
பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா நடத்திய வன்முறையில் முஸ்லிம்கள் வாழும் பேருவளை, தர்கா நகர் மற்றும் அளுத்கம போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தில் 4 நபர்கள் கொலை செய்யபட்டுள்ளதுடன், மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வணிக அலுவலகங்கள் தீ வைக்கபட்டன. சிங்கள மக்களுக்கு சொந்தமாக உடமைகளும் சேதமாகியுள்ளன.
பொது பல சேனா கடந்த 2 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.
மேலும் இவர்கள் தேவையற்ற அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ஜனாதிபதி ராஜபக்ச, இரணுவத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ரஜித சேனரத்ன, இராணுவத்தை தவிற வேறு எவராலும் 1 மாத காலத்தில் சீரமைக்கும் பணியை முடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo3.html
பாதுகாப்பு தரப்பினர் துன்புறுத்தல் கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளனர்!– சிறிலங்கன் கார்டியன்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:28.04 PM GMT ]
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதுளையில் சிறையில் வைத்து 17 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையின் தாக்குதலில் உயிரிழந்தார்.
மேலும் வெளிநாடுகளில் நாடுகடத்தப்படுகின்றவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவை அனைத்து துன்புறுத்தல் கலாசாரத்துக்கு இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் அடிமையாகி இருக்கின்றமையை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டம் ஒன்று இருக்கிறதே தவிர அது என்றும் அமுலாக்கப்பட்டதில்லை என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo4.html
Geen opmerkingen:
Een reactie posten