தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

மார்டி அதிசாரிக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவான சிங்கள ஊடகம் ஒன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசிய கட்சியின் முரண்பாட்டை தீர்த்து வைத்தது அமெரிக்கா!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:43.19 PM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியில் நிலவிய முரண்பாடுகளை அமெரிக்க அரசாங்கமே தீர்த்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வந்தது.
எனினும் ரணில் விக்ரமசிங்கவும்,  சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நிலவி வந்த முரண்பாடுகள் இந்த முயற்சிக்கு பெரும் தடையாக இருந்தது.
இந்தநிலையில் அமெரிக்கா தலையிட்டு இருவருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாட்டை தற்போது தீர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmpy.html
மார்டி அதிசாரிக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவான சிங்கள ஊடகம் ஒன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:48.02 PM GMT ]
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ள சர்வதேச குழுவில் இணைக்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரிக்கு (martti ahtisaari) எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான சிங்கள ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
மார்ட்டி அதிசாரி, கொசோவோ பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகித்த வேளையில், சேர்பியாவில் இருந்து கொசோவோவை பிரிப்பதற்கு அல்பேனிய மாஃபியா குழுவினர் அவருக்கு 40 மில்லியன் டொலர்கள் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு லஞ்சம் பெற்ற ஒருவரை இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழுவில் இணைத்திருக்கின்றமையானது விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மையை சிதைத்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் அதிசாரி மேற்குல நாடுகளின் கட்டளையின் படி மாத்திரமே செயற்படக் கூடியவர் என்றும் விமர்சித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏற்கனவே இந்த குழுவில் போர்க்குற்ற விசாரணைகளில் 20 வருடங்கள் அனுபவம் கொண்ட சன்ரா பைடாஸ் இணைக்கப்பட்ட போதும், அவர் தென்சூடானில் இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டினை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmpz.html

Geen opmerkingen:

Een reactie posten