[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 12:20.00 AM GMT ]
இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலமாக ஏராளமான தமிழ், முஸ்லிம் மாணவிகளும் கல்வியைத் தொடர்கின்றனர். எனினும் தற்போதைய அதிபர் பதவியேற்றது தொடக்கம் பாடசாலை வளாகத்தினுள் பௌத்த கலாசாரம் தவிர ஏனைய கலாசாரங்களுக்கு இடமளிக்காத போக்கைப் பின்பற்றுகின்றார்.
இதன் உச்சகட்டமாக முஸ்லிம் மாணவிகள் மற்றும் அவர்களின் தாய்மார் பாடசாலை வளாகத்தினுள் பிரவேசிக்கும் போது தமது பர்தாவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தார்.
மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவின் ஆதரவு தனக்கு இருப்பதால் தன்னை யாரும் அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இது தொடர்பாக மாணவியரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மேல் மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சு இவ்விடயத்தில் தலையிட்டது. இவ்விடயத்தில் தொடர்ந்தும் பிடிவாதமாக செயற்படும் பட்சத்தில் அதிபர் இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிபர் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தினுள் பர்தா உடைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmqy.html
153 தமிழர்களுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ளது!- அவுஸ்திரேலியப் பத்திரிகை
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:01.19 AM GMT ]
படகில் வந்தவர்களுடன் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்ட போது அவர்கள் அகதிகள் என தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு வாரங்கள் பயணித்து, கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும் மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யவோ நிராகரிக்கவோ மறுத்திருக்கிறது.
இந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படகில் 31 குழந்தைகளும் 32 பெண்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.
இப்படகில் நீர்க்கசிவு ஏற்ப்பட்டிருப்பதாகவும் இடையில் இந்தோனேசியா மீன்பிடி படகினுள் அரிசி மற்றும் மீன் போன்றவற்றைத் தந்து உதவியதாகவும் தெரிவித்தனர். ஆனாலும், படகில் நீர்க்கசிவு இல்லை என்றும் இயந்திரத்தின் ஒயில் கழிவு தான் ஏற்பட்டதே என்றும் பிந்திய செய்திகள் சொல்கின்றன.
டிசம்பர் 19ம் திகதிக்கு பின் அவுதிரேலியாவிற்கு எந்த படகும் வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வந்த பல படகுகளை அவுஸ்திரேலியா தடுத்து, வந்தவர்களை உயிர்காப்புப் படகுகளில் ஏற்றி இந்தோனேசியாவுக்கு அனுப்பியிருந்தது.
ஆனால் இப்படகு இந்தோனேசியாவில் இருந்து புறப்படவில்லை என்பதால் வந்தவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்ப முடியாது. அவர்கள் இந்தியாவுக்கும் திருப்பி அனுப்பப்பட முடியாது. இவ்வகையில், இப்படகு அவுஸ்திரேலிய அரசுக்கு ஒரு தலையிடியைத் தரப்போகிறது என்று அவுஸ்திரேலியப் பத்திரிகை எதிர்வு கூறியிருக்கிறது. .
இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார். நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள படகு பற்றி அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லையென அவர் கூறினார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் எல்லை பாதுகாப்பு விடயங்களில் சிரமத்துடன் கரிசனையாகச் செயற்படுகிறது என்று தெரிவித்த பேச்சாளர், தமது எல்லை பாதுகாப்பு கொள்கைகளில் எதுவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியப் பிரதமரை ஊடகவியலாளர்கள் இப்படகு பற்றிக் கருத்துக் கேட்டிருந்தனர். அக்கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்த்த அவர் எல்லைப் பாதுகாப்பு பற்றி வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைகளையே இப்போதும் எடுப்போம் என்று சொல்லியுள்ளார்.
தத்தளிக்கும் அகதிப் படகில் இருந்து கிடைத்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் தத்தளிப்பதாகக் கூறப்படும் படகு பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
boad1 இந்தப் படகில் இருந்து கொண்டு பேசுவதாகக் கூறும் ஒருவர், படகிற்கு நேர்ந்துள்ள கதி பற்றி தொலைபேசியின் ஊடாக விபரித்துள்ளார்.
boad1 இந்தப் படகில் இருந்து கொண்டு பேசுவதாகக் கூறும் ஒருவர், படகிற்கு நேர்ந்துள்ள கதி பற்றி தொலைபேசியின் ஊடாக விபரித்துள்ளார்.
இவர் தம்மை ஜூட் என்று அறிமுகம் செய்து கொண்டு, ஏபிசி நிறுவனத்தின் காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொலைபேசியின் ஊடாக பேசினார்.
குறித்த படகு கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் இருப்பதாகவும், இதில் 152 பேர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்மத்தியில் 32 (பெண்கள்) மற்றும் 37 பிள்ளைகள் உள்ளனர்.. கிறிஸ்மஸ் தீவில் இருந்து 153 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறோம்,’ என்றார் அவர்.
இந்த அகதிகளில் அனேகமானவர்கள் இலங்கையர்கள் எனவும், இவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து புறப்பட்டதாகவும் ஜூட் குறிப்பிட்டார்.
நாம் அகதிகள். நாங்கள் சொந்த நாட்டிலே இடம் பெயர்ந்தோம் பின்பு இந்தியாவில் தங்கியிருந்தோம். அங்கு வாழ முடியாது. நாம் அவுஸ்திரேலியா வருவது அதனால் தான்.’எம்மை காப்பாற்றுவதற்கு ஏன் மறுக்கின்றார்கள் என்று தெரியவில்லை
தாம் வந்த கப்பல் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு உதவி தேவையென ஜூட் குறிப்பிட்டார்.
இங்கு கடுமையாக மழை பெய்கிறது. எங்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்கவில்லை. காற்று வேகமாக வீசுகிறது. பெரும் அலைகள் எழும்புகின்றன’ என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் படகு பற்றி அவுஸ்திரேலிய சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை சுங்கத்திடம் கேட்குமாறு பதில் கிடைத்ததாக ஏபிசி அறிவித்துள்ளது.
படகு பற்றி அதிகாரசபை அறிந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இவர்களின் உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றமை தெட்டத்தெளிவாக விளங்குகிறது.
முன்னர் வந்த செய்தி - மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்-தத்தளிக்கும் அகதிப் படகில் இருந்து கிடைத்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq1.html
Geen opmerkingen:
Een reactie posten