தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியம்?!- தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம்

புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!- திவயின
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:08.03 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் ஆதரவாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்றிணைந்த செயலாளர் ரன்கே சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் போலிப் பிரசாரங்களினால் இந்தியாவின் முக்கிய பிரபுக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதன் ஓர் கட்டமாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq2.html
இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிக்கு சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு: சிங்கள ஊடகம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:10.31 AM GMT ]
இலங்கையின் முன்னணி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருக்கு சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு இருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட இரகசிய அறிக்கiயில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக்குழு ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்ட ஓர் இயக்கமாகும்.
இந்த இரகசியத் தகவல்களை இலங்கைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் அதிகாரியொருவர் அமெரிக்காவிடம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஒருவர் இந்த இரகசிய தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.
அம்பாறையில் முஜாகுதீன் குழுவும், திருகோணமலையில் ஒசாமா குழுவும் இயங்கி வருகின்றன.
இதற்கு மேலதிகமாக கொழும்பில் நான்கு முஸ்லிம் பாதாள உலகக் குழுக்கள் இயங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq3.html
பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:13.13 AM GMT ]
அளுத்துகம பேருவளை சம்பவங்கள் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த இருபது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த விசாரணைகளில் நம்பிக்கை கிடையாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கோரியுள்ளது.
ஒரு மாதம் போன்ற ஓர் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் ஜனாதிபதி விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
உதாரணமாக அளுத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களின், மரணச் சான்றிதழ்களிலும் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் தொடர்பிலான மக்களின் நம்பிக்கை வலுவிழந்துள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளர்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq4.html
நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியம்?!- தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:16.22 AM GMT ]
நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெகுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி அதன் மூலம் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்
ஜனநாயக ரீதியில், அரசியல் அமைப்பிற்கு அமைவான வகையில் இவ்வாறு பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சில ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதுää
இதேவேளை,  எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம்
அடுத்த வருடம் தேசிய ரீதியில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் தொகுதிகளில் செல்வாக்கை செலுத்தும் வகையில் அமெரிக்காவின் நிதிகள் பயன்படுத்தப்படுகின்றதா? என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணிக்கு எதிராக மெரிக்காவின் நிதிகள் உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக பயன்படுத்தப்படலாம் என்று அரசாங்கம் சந்தேகிக்கிறது.
இதனையடுத்து உள்ளுர் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் மீது தமது கவனத்தை செலுத்துவதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, இலங்கையில் ஆட்சியை மாற்றும் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmq5.html

Geen opmerkingen:

Een reactie posten