தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒத்துழைத்து நடக்கத் தயார்!- இலங்கை!

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 03:25.20 PM GMT ]
காத்தான்குடியில் கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி செல்வநகர் பிரதேச குறுக்கு வீதியொன்றில் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இன்று இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட குண்ட செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo2.html
ஜனாதிபதியை கொலை செய்தேனும் ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் முயற்சி!– ஜொன்ஸ்டன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 11:38.16 PM GMT ]
ஜனாதிபதியை கொலை செய்தேனும் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிக்கவரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் வைபவமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் வெளிநாடுகளிடம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார். இதனால் பொதுபல சேனா அமைப்ப ஜனாதிபதியை திட்டுகின்றது.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை திட்டுகின்றார்.
ஜனாதிபதி இரண்டு தரப்பினரிடமும் திட்டு வாங்க நேரிட்டுள்ளது.
எனினும் நாடு என்ற ரீதியில் மக்களுகு;கு எது நன்மைகளை ஏற்படுத்துமோ அதனை ஜனாதிபதி செய்கின்றார்.
ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் காரணமாக எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன.
அரேபிய நாடுகளில் போன்று இலங்கையிலும் குழப்பங்களை விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
கஸ்டப்பட்டு ஈட்டப்பட்ட சமாதானத்தை எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்க முடியாது.
ஜனாதிபதி நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo5.html
பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு! முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 11:54.17 PM GMT ]
பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சபரகமுவ மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் விசமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு சொந்தமான ஹிங்குராங்கொட தோட்டத்தில் வைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொண்டதாகவும், முதலமைச்சரின் வீடு ஒன்றில் சந்தேக நபர் தலைமறைவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வீட்டிலிருந்து சந்தேக நபர் விரட்டப்பட்டதாகவும் அதன் பின்னர் சந்தேக நபர் தனது வீட்டுக்குச் சென்று விசம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசமருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆபத்தான நிலையில் இரத்தினபரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo6.html
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒத்துழைத்து நடக்கத் தயார்!- இலங்கை
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 12:04.45 AM GMT ]
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூட்டணி அரசாங்கம் அனுசரிக்கும் கடுமையான கொள்கையை தீவிர சோதனைக்கு உள்ளாக்கியுள்ள விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவுடன் ஒத்துழைத்து நடக்கத் தயாரென இலங்கை தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் இருந்து புறப்பட்டு இரு வார கால கடற்பயணத்தை அடுத்து கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் அவுஸ்திரேலிய கப்பலொன்றில் 153 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அத்தகைய தகவல்களுக்கு மத்தியில், படகுகளில் வந்தவர்களை துரிதமாக திருப்பி அனுப்புவது அடங்கலாக அவுஸ்திரேலியாவின் எல்லைக் காவல் கொள்கைக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து உதவியளிக்குமென அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திஸர சமரசிங்க (Thisara Samarasinghe)  தெரிவித்தார். அவர் அவுஸ்திரேலியாவை நெருங்கிய நட்புநாடென வர்ணித்தார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்டு வந்த இரு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவற்றில் ஒரு படகு இந்தியாவில் இருந்து வந்ததெனவும், மற்றையது சுமார் 50 பேருடன் இந்தோனேஷியாவில் இருந்து வந்ததெனவும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கைகள் பற்றி மத்திய அரசாங்கம் கருத்து வெளியிட மறுத்த சமயத்தில், கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ள ஓஷன் ப்ரொடெக்டர் என்ற கப்பலைச் சுற்றி கணிசமான அளவு நடமாட்டங்கள் இடம்பெறுவதாக தீவு வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தத் தீவிலுள்ள பணியாளர்கள் கருத்து வெளியிட்ட சமயம், இன்று படகிலுள்ள தமிழ் அகதிகள் தீவிற்கு அழைத்து வரப்படும் பட்சத்தில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக படுக்கைகளை ஒழுங்குபடுத்துமாறு தாம் பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
படகு விவகாரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்து விட்டார். இலங்கையின் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் மீளப்பெறத் தயாராக இருக்கிறதா என்று கேட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை.
ஆனால், இலங்கையில் மனித உரிமைகளுக்காகவும், அகதிகளின் நலன்களுக்காக பேசுபவருமான லக்ஷ்மன் டயஸ் கருத்து வெளியிட்டார். இந்தியாவில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களான புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை கடந்த 12 மாதங்களில் பல தடவைகள் அவுஸ்திரேலியா இலங்கைக்கு அனுப்பியிருந்தது.
இந்தியா அகதிகளை ஏற்க மாட்டாது என்பது இதற்குரிய காரணமல்ல. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா கொண்டுள்ள புரிந்துணர்வு தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர், இலங்கைக் கடவுச்சீட்டோ அல்லது குடும்ப அங்கத்தவர்களோ இல்லாமல் 10 முதல் 20 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தவர்கள். தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சில சமயங்களில் அவர்கள் தாக்கப்படுவார்கள், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் இந்தியா திரும்ப முடியாது, என்றார், திரு.டயஸ்.
அதேநேரம் இது தொடர்பாக பசுமை கட்சியினால் எல்லைக் காவல் ரோந்துக் கப்பல்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நோய்வாய்ப்பட்ட இளம்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என விளக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால், 30 பிள்ளைகள் அடங்கலாக, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேருடன் படகொன்று தத்தளிக்கிறது என்ற செய்தியை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்தது.
இந்தோனேஷியாவில் இருந்து 50 பேருடன் வந்ததாகக் கூறப்படும் இரண்டாவது படகை அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் ட்ரைற்றன் என்ற படகு வழிமறித்ததாக வெளியான தகவல்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், உள்ளுர் படகுகள் மூலம் ட்ரைற்றன் உள்ளிட்ட இரு படகுகளுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தீவு வாசிகள் கூறினார்கள் என்று பசுமைக் கட்சி அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்கக்கூடிய புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலை பற்றி தாம் கரிசனை கொண்டிருப்பதாக பசுமைக் கட்சியின் குடிவரவு விடயங்கள் தொடர்பான பேச்சாளர் சாரா ஹான்சன்-யங் தெரிவித்தார்.
ஏற்கனவே, இரு வாரங்களுக்கு மேலாக கடலில் இருந்தவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் விபரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு அதி வேக படகுகள் 2வழங்கியதை அடுத்து படகுகள் அங்கிருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வறாயினும் உண்மை நிலையை மொரிசன் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இது எல்லைப் பாதுகாப்புத் திட்டம் என்பதை விட, சிறைக் கப்பல்கள் திட்டமாகத் தோன்றுகிறது, என்றார், பசுமைக் கட்சியின் பேச்சாளர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblo7.html

Geen opmerkingen:

Een reactie posten