தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் (Facebook) தளம் முடக்கம்- லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்!

நவநீதம்பிள்ளைக்கு புகழாரம்! ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிரிவுபசாரம்! மூன் பாராட்டு
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 03:46.54 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றிய, நவநீதம்பிள்ளையின் பணிக்காலம் இன்னும் எட்டு வாரங்களில் முடிவடையவுள்ளது.
இந்தநிலையில், நேற்றுடன் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில் அவருக்குப் பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் முல்லர் வாசித்தார்.
நவநீதம்பிள்ளை ஒரு அசாதாரணமான மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றியுள்ளதாகவும், நம்பகத்துடனும், உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர் பாடுபட்டவர் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து நவநீதம்பிள்ளையின் பணியைப் பாராட்டியும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தியும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
இறுதியில், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை, தன் மீது அன்பு பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu5.html
புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்கத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவிற்கு பணிப்புரை
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 11:32.14 PM GMT ]
புகலிடக் கோரிக்கையாளர்கள் வரும் பட்சத்தில், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்-டியர்னான் தெரிவித்துள்ளார்.
Christmas Island இல் கடந்த வியாழக்கிழமை இரவு புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கூடிய படகொன்று அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தமது படகில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.
இந்தப் படகு தென்னிந்தியாவில் இருந்து வந்ததெனவும், அதில் 37 சிறுவர்கள் அடங்கலாக 152 பேர் இருப்பதாகவும் தெரிவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இரு படகுகளில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சனிக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாக மெக் டியர்னன் தெரிவித்தார்.
எந்தவிதமான படகுகளும் வந்ததாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று குடிவரவு அமைச்சர் கூறி இருந்த போதும், நேற்று இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் உடனடியாக நவ்ரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu6.html
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் (Facebook) தளம் முடக்கம்- லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 11:54.27 PM GMT ]
 பொது பல சேனா அமைப்பினரின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அளுத்மக, பேருவளை பகுதிகளில் பெரும் வன்முறைகளை அடுத்து பொதுபல சேனாவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டிருந்ததுடன், தற்போது, அதன் அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனது பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 25 ஆம் திகதி எனது பேஸ்புக் பக்கத்துக்கு நான் சென்றேன். ஏனைய அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது' என பொது பல சேனாவின் பேச்சாளர் திலந்த விதானகே ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரோவும் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அண்மையில்  லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மி ஜயவிக்ரம இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அரச சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனால் புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நியமனங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu7.html

Geen opmerkingen:

Een reactie posten