தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு!

இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் சவூதி காவற்துறை அறிவுறுத்து!
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 01:57.49 PM GMT ]
சவூதி அரேபியாவில் தொழில் புரிகின்ற இலங்கைப் பணிப் பெண்களை வெளித்தரப்புடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அந்த நாட்டின் காவற்துறையினர் தொழில்தருனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அரப் நியூஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போது ரமழான் மாதம் என்பதால், சவூதியில் பணியாற்றுகின்ற இலங்கை பணிப் பெண்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒப்பந்தகாரர்களின் வீடுகளில் தப்பி வேறு இடங்களில் தொழிலுக்கு இணைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் இவ்வாறு வேறு இடங்களில் தொழிலில் இணைவதன் மூலம் சுமார் 2000 சவூதி ரியால்கள் வரையில் ஈட்டிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே இலங்கை பணிப் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ, அல்லது அவர்களை தனியாக வீட்டில் இருந்து வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என்று காவற்துறையினர் கோரியுள்ளனர்.
மேலும் இவ்வாறான பெண்கள் தொடர்பில் சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும், கடவுச்சீட்டு காரியாலயத்துக்கும் அறிவித்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmt7.html
சமூக வலைத்தளங்கள் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: கோத்தபாய எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 12:35.17 PM GMT ]
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத மற்றும் மதவாத மோதல்கள் அதிகரிக்கும் வகையில், பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்குக்கு வரும் வகையில், அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய முறையில் சட்டத்தை செயற்படுத்துமாறும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மைய காலத்தில் ஏற்பட்ட மத ரீதியான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், சில சமூக வலைத்தளங்கள் மூலமாக மீண்டும் மோதல்களை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர்.
மதவாத ரீதியான மோதல்களை தடுக்க அரசாங்கம் உட்பட மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் முனைப்புகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், சமூக வலைத்தளங்கள் வழியாக மீண்டும் அவ்வாறான மோதல்களை ஏற்படுத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmt6.html
பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 02:20.33 PM GMT ]
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமானதாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, கோத்தபாய ராஜபக்ஷவின் வழிநடத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக முஸ்லிம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதனை நிராகரித்துள்ள அவர், முஸ்லிம் சமூகங்கள் மீது பௌத்த அடிப்படை வாத பிக்குகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பட்டியல் ஒன்றை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் சில செயற்பாடுகளே சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுவதாக பௌத்த பிக்குகள் தெரிவித்திருப்பதாக கோத்தபாய இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக்குகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இணங்க முஸ்லிம் சமூகம் தங்களின் தவறுகளை ஒப்பு கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பில் யாரும் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடக் கூடாது என்று கோத்தபாய உத்தரவிட்டுள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmuy.html

Geen opmerkingen:

Een reactie posten