தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

மதுரையில் திரண்ட பெண்கள் கூட்டம்: இசைப்பிரியாவுக்கு அஞ்சலி மற்றும் நடுகல் நாட்டப்பட்டது !

மாணவியைக் காதலிப்பதற்காக போட்டி - மாணவன் தாக்கியதில் இன்னொரு மாணவன் படுகாயம் !

[ Jun 29, 2014 02:42:07 PM | வாசித்தோர் : 3605 ]
யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட காதல் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சண்டையிட்ட இரு மாணவர்களும் மாணவி ஒருத்தியை காதலிக்க போட்டி போட்டு வந்ததாகவும் இந் நிலையில் அம் மாணவிக்கு முன்னாள் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மற்றைய மாணவனைக் கேலியாகப் பேசி அவமானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
இதனால் கோபமடைந்த அம் மாணவன் பாடசாலை விட்ட பின் வாசலில் வைத்து இரும்புக் கம்பியால் கேலி செய்த மாணவனை தலையில் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். யாழ் பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/304.html

மதுரையில் திரண்ட பெண்கள் கூட்டம்: இசைப்பிரியாவுக்கு அஞ்சலி மற்றும் நடுகல் நாட்டப்பட்டது !

[ Jun 29, 2014 04:39:17 AM | வாசித்தோர் : 7700 ]
மதுரையில் திரண்ட பெண்கள் உணர்சி ததும்ப இசைப்பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்: நடுகல் ஒன்றும் நாட்டப்பட்டது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. நேற்றைய தினம்(28) மாலை இன் நிகழ்வு மதுரையில் இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் இதில் கலந்துகொண்டு உணர்ச்சியோடு மெழுகுவர்திகளை ஏற்றினார்கள். இசைப்பிரியா தொடர்பான பதாதைகளும், ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களின் பாதாதைகளையும் அவர்கள் கைகளின் ஏந்தி நின்ற காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை சுமந்து, ஈழத் தமிழர்களுக்காக நாம் குரல்கொடுக்க இருக்கிறோம் என்று தமிழகத்தில் உள்ள உறவுகள் மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லியுள்ளார்கள். (புகைப்படங்கள் இணைப்பு)
http://www.athirvu.com/newsdetail/301.html

Geen opmerkingen:

Een reactie posten