தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

பிக்குகள் ரவுடிகளை போல் செயற்படக் கூடாது!- சுஜீவ சேனசிங்க!

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதில் ஆளும் கட்சி அமைச்சர்கள் மும்முரம்: அரியம் எம்.பி
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 06:46.22 AM GMT ]
ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இனங்களுக்கிடையே குரோத மனப்பாங்குகளை உருவாக்கும் செயற்பாடுகளிலேயே இறங்கியதன் வெளிப்பாடே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை இதுவரைகாலமும் வழங்க முன்வராமைக்கான காரணம் என பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார சமூகங்களிடையே நல்லெண்ணத்தினை வெளிக்காட்ட வேண்டும் என்று வெளியிட்ட கருத்துத் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இதனைத்தெரிவித்தார்.
இவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்ககையில்,
இந்நத நாட்டிலே உள்ள  அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறைமையுள்ள ஜனநாயக நாட்டின் சிறந்த பண்பாகும்.
இதனை விடுத்து ஒரு இனத்திற்கு மாத்திரம் அனைத்து உரிமைகளையும் வழங்கிவிட்டு ஏனைய இனத்தின் கருத்துச் சுதந்திரத்தினை பறிக்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் அன்றிலிருந்து இன்று வரைக்கும் முiனைவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
எவர்  நாட்டிற்கு எதிராக செயற்பட்டாலும் அவருக்கான தண்டனையை வழங்கவேண்டியது அந்த நாட்டின் தலையாய கடமையாகும்.  அதனைவிடுத்து குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் புதிதாக அமைச்சரவையை கூட்டி அமைச்சரவை பத்திரத்தினை தாக்கல் செய்துதான் தண்டனையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றார் என்றால் குற்றம் செய்தவன் தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையே ஆகும்.
அமைச்சரவை பத்திரத்தினை தாக்கல் செய்து அதற்கான அனுமதி கிடைக்கும் வரைக்கும் ஊடகங்களை அடக்கும் செயற்பாடே இவரின் சூட்சுவமான செயற்பாடாகும்.
இடது சாரிக்கட்சிகளின் கொள்கையினைக் கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கரா இந்த நாட்டிலே தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாடவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து அதனைக்கூட இதுவரைக்கும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்து கொண்டிருப்பது அவரது வலுவற்ற தன்மையினை எடுத்துக்காட்டுகின்றது.
தற்போது ஆளும் தரப்பில் உள்ள அமைச்சர்கள் முழுக்க முழுக்க ஒவ்வொரு நாளும் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் குரோதமான வார்த்தைகளையே கைக்கிக் கொண்டு வருகின்றார்கள்.
இதனை உடனடியாக நிறுத்தி மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை எடுத்து மனிதநேயத்துடன் அவர்களது பணிகளை கையாண்டாலே ஓரளவிற்காவது மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.
அதனை விடுத்து எந்த நாளும் பிரிவினையை உருவாக்கும் குரோதமான வார்த்தைகளை பிரயோகிப்பதனை தவிர்த்தும் தாங்கள் இந்த நாட்டின் அமைச்சர்கள்தானே எதனையும் பேசலாம் எப்படியும் செய்யலாம் என்ற மமதையினை விட்டெறிந்து, சிறுபான்மை இனத்திற்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr7.html

இலங்கை ரஷ்ய உறவில் புதிய பரிணாம வளர்ச்சி
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 06:18.14 AM GMT ]
இலங்கை ரஷ்ய உறவு மென்மேலும் வலுப்  பெற்றுள்ளது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்ச்சவா தெரிவித்துள்ளார். 
மேலும் கல்வி, சுற்றுலா,மனிதாபிமான விவாகாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களிலும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ரஸ்ய தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr5.html
பிக்குகள் ரவுடிகளை போல் செயற்படக் கூடாது!- சுஜீவ சேனசிங்க
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 06:26.53 AM GMT ]
பௌத்த பிக்குகள் தூஷண வார்த்தைகளை பேசி ரவுடிகளை போல் செயற்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவிக்கையில்,
மனிதர்கள் குரங்கில் இருந்து மனிதர்களாக பரிமாண வளர்ச்சியடைந்தவர்கள். குரங்குகளுக்கு ஜாதி, மத, பேதமில்லை.
நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் குழுக்களை ஏன் உருவாக்கி வருகின்றனர். நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், கலவலரங்களை ஏற்படுத்துவது சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவருக்கும் சட்டம் சமமானதாக இருக்கவேண்டும். மத தலைவர்களாக அடிப்படைவாதிகளாக செயற்படக் கூடாது.
நாம் அனைவரும் மனித இனத்தவர்கள். பௌத்த மத தலைவர்கள் தூஷணங்களை பேசிக் கொண்டு ரவுடிகளை போல் செயற்படக் கூடாது.
மத தலைவர்கள் தமக்குரிய பணிகளை அவர்களால் செய்ய முடியாது போனால், காவியை கழற்றி விட்டு, எம்மை போல் அரசியலில் ஈடுபட வேண்டும்.
சகல சம்பவங்களும் நடந்த பின்னர் அரசாங்கம் கட்டளைகளை பிறப்பிப்பதில் பயணில்லை எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr6.html

Geen opmerkingen:

Een reactie posten