தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

போர்க்குற்ற விசாரணைகள் வெற்றி பெற்றால்..! (ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு பாகம்- 4)

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமை விசாரணைகள் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் இலங்கை அரசானது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற் போனோர் பற்றி விசாரிக்கப் போகின்றதாம்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் என்பது தனியே இலங்கைக்கு எதிரான ஒன்றல்ல. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த சவுக்கடியாகும்.
போர்க்குற்ற விசாரணைகள் பல நாடுகளின் மீது ஐ.நா மனித உரிமை சபையால் நடாத்தப்பட்டுள்ளன. கம்போடியா, சூடான். கிழக்குத்திமோர் போன்ற நாடுகளில் ஒரு தசாப்த காலத்தை அண்மைய காலங்களில் நடாத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணகள் எல்லாம் தேசிய இனங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.
இந்தோனேசியா, சூடான், கம்போடியா போன்ற நாடுகளில் இனப்படுகொலையை செய்தவர்கள் அனைவரும் சர்வதேச போர்க்குற்றத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டு 30,40 வருடச் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் இனவழிப்புக் கொள்கை தோல்வியடைந்தமையே இங்கு முக்கிய கருப்பொருளாகும்.
சனல்-4, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகத்தின் தன்னலங் கருதா சேவைகள்
2009 ஐனவரி தொடக்கம் மே மாதம் வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் 70000 மக்கள் அரச படையினரால் கொல்லபட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்நிறுத்திய சனல் 4 அமைப்பானது, அதற்கான ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு படிப்படியாக வெளியிட்டு இலங்கை அரசாங்கத்தின் கோயபல்ஷ் பிரசாரத்தினை முறியடித்தது.
இலங்கைக்கு ஆதரவாகச் சில நாடுகள் வாக்களித்து அவர்களை நன்மதிப்பு மிக்க நாடாகக் காட்ட முயற்சித்தனர்.
இறுதியில் மண் கவ்விய நாடான இலங்கையிலும் பார்க்க இந்தியாவினது வேண்டுகோள்கள், திருத்தங்கள் எதுவும் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு அறத்தின் பால் கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம்.
சனல்-4, சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் பக்கத்திற்காக இறுதிவரை குரல் கொடுத்து. போர்க்குற்ற விசாரணையை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்தனர் என்றால் மிகையாகாது.
போர்க்குற்ற விசாரணயில் சாட்சியம் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது, ஐ.நா மனித உரிமை சபையினை அவமதிக்கும் செயலாக்க கருதப்பட்டு அதற்கெதிரான நடவடிக்கைளில் இனி ஐ.நா.மனித உரிமை சபையானது நடவடிக்கை எடுக்கும். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சாட்சி சொல்பவர்களை எவ்வாறு ஐ.நா.சபை காப்பாற்றும், அவர்களின் பாது காப்புக்கு உத்தரவாதம் எவ்வாறு கொடுக்கப்படும் என்பது இனி வரும் காலங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமாகும்.
ஐ.நா.மனித உரிமைச் சபை இலங்கையில் வாழ்ந்து கொண்டு அரசிற்கெதிராக சாட்சியமளிக்கும் தமிழர்களைக் காப்பாற்றும் விடயத்தில் சர்வ வல்லமை படைத்த ஐனாதிபதியிடம் பல நிபந்தனைகளை விதிதக்கும், எந்த நிபந்தனைக்கும் உத்து வராது இருக்கும் பட்சத்தில் பொருளாதாரத் தடையை நிச்சயம் கொண்டு வரும்.
பொருளாதாரத் தடை தடையைக் கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதாளத்தை நோக்கிச் செல்லும், வறிய மக்கள்,இடைத்தர மக்கள் அரசிற்கெதிராக கிளர்ந்து எழுவர். இந்தோனேசியாவில் பொருளாதாரச் சரிவில் இருந்து தான் கிழக்குத் தீமோர் பிறந்தது.
நாளை நமதே
இலங்கை அரசானது தன் இனத்தில் உள்ள பெரும் அறிவாளிகளின் எச்சரிக்கைகளையும் மீறி அட்டகாசம் போட்டமையானது தமிழர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என நாம் சந்தோசமடைய வேண்டும்.
இனப்படுகொலை,போர்க் குற்றங்களில் இருந்து இலங்கை அரசானது இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடன் தப்பிவிட முடியும் என நினைப்பது பிழையானது.
அப்படியென்றால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் செல்வாக்கை பெற்ற சூடான் ஏன் தோல்வியைத் தழுவி தென் சூடான் பிரிந்து போக வாக்கெடுப்பு நடாத்த ஒத்துக்கொண்டது
தென்சூடானிய மக்கள் சிந்திய இரத்தமும், அவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளும் நாளை தென்சூடானில் சந்திப்போம் என்ற இலட்சிய வேட்கையும் 98 வீத மக்களிடம் குடிகொண்டிருந்தமையே அதி சிறந்த காரணமாகும்.
ஆ.கோபால், கனடா
arumugamgopal9@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu3.html

Geen opmerkingen:

Een reactie posten