[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 07:52.37 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அடுத்த மாதம் நடுப்பகுதியில் புதுடெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் புதுடெல்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தனும், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
அக்கடிதத்தில் அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த கடிதங்களுக்கு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக, பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதங்களில், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு அடுத்த மாத நடுப்பகுதியில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றிய விபரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw6.html
விசாரணைக் குழு இலங்கை வருவதற்கு அனுமதி கோரவில்லை: வெளிவிவகார அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 08:32.33 AM GMT ]
இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கோ எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த விசாரணையை எதிர்க்கும் முடிவில் இருந்து இலங்கை அரசு பின்வாங்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் 12 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களினால் ஜூலை மாதம் இடைப்பகுதியில் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளன.இக் குழுவினர் 10 மாத காலப்பகுதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த குழுவினரால் இடைக்கால அறிக்கை ஒன்று செப்டெம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விசாரணைக் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று வல்லனர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw7.html
Geen opmerkingen:
Een reactie posten