நான் நாட்டில் இருந்திருந்தால் அளுத்கம, பேருவளைப் பிரதேசங்களில் ஒரு துளி இரத்தம் சிந்தவோ, சொத்துக்கள் அழிக்கப்படவோ இடமளித்திருக்கமாட்டேன். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்தன.
பேருவளை பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய அமைச்சர் உடனடியாக வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கக மற்றும் பேருவளைப் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட பிரதேசங்களைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள சகல சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நடைபெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
வன்முறையில் அழிக்கப்பட்ட சொத்துக்களை நாம் மீண்டும் உரியவர்களுக்கு வழங்குவோம். அதேவேளை, இந்த வன்முறைகள் காரணமாக உடைந்துபோன உள்ளங்களை சீரமைக்க இப்பிரதேச சகல சமயத் தலைவர்களும் முன்வரவேண்டும் - என்று கோரிக்கை விடுத்தார்.

 |
26 Jun 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403821390&archive=&start_from=&ucat=1&
இலங்கை புலனாய்வாளர்கள் தகவல்கள் திருட்டு! பதட்டத்தில் இராணுவ உயர்மட்டம் (படம் இணைப்பு) |
கண்டி அத்துகிரிய "மிலேனியம்" சிற்றியிலிருந்து செயற்பட்ட இலங்கை புலனாய்வுகுழுக்களின் தகவல்கள் அப்போது அம்பல்பபடுத்தப்பட்டது யாவரும் அறிந்ததே. இச்சம்பவம் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்றது. இதனால் இக் குழுவில் செயல்பட்ட சுமார் 20 சிங்கள புலனாய்வாளர்கள் பின்னர் குறிவைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள்.
இவர்களை யார் திட்டம் தீட்டி கொலைசெய்தார்கள் என்பது தொடர்பாக நாம் சொல்லவே தேவையில்லை. தற்போதும் அதுபோல ஒரு சதி நடவடிக்கை நடந்து வருவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவர் இதனை அறிவித்தலாக மட்டும் விடவில்லை. பதட்டமாக தெரிவித்துள்ளார் என்பது மிக முக்கியமான விடையம் ஆகும்.
பேருவளை, அளுத்கம வன்முறைகளை பயன்படுத்தி, ஏனைய பகுதிகளிற்கும் அந்த தீயை பரப்பிவிட சிலர் முயன்றனர். எனினும், புலனாய்வு சேவையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் முறையாக நடந்து கொண்டு, திட்மிடப்பட்ட அனர்த்தங்களை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறிய பிரிகேடியர் ருவாண் வணிகசூரிய,
மேற்குலக நாடு ஒன்றின் தூதுவராலயத்தில் ஒரு ரகசிய கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் கலந்துகொண்ட சிலர், புலனாய்வு துறையில் ஒரு குழுவில் வேலைபார்க்கும் நபர்களின் பெயர்களை எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதனூடாக பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளில் கலவரம் நடந்தவேளை செயல்பட்ட சில சிங்கள புலனாய்வு துறை அதிகாரிகளின் பெயர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரவுள்ளது எனபதே, பிரிகேடியர் ருவாண் வணிகசூரியவின் பதட்டத்திற்கு காரணம் ஆகும்.
இந்த விடையம் தொடர்பாக நாம் பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். சில முஸ்லீம்கள் அமெரிக்க அரசுக்கு சில தகவலை வழங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தற்போது நன்றாகத் தெரிகிறது. இது என்ன விடையம் என்பது விரைவில் வெளியாகும்.
 |
26 Jun 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403823278&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten