தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் சம்பிக்க மீது குற்றச்சாட்டு

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை!- படுகாயமடைந்த யசோதரன்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:55.28 PM GMT ]
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தங்கவேல் யசோதரன், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
அத்துடன், முக்கொலை குற்றவாளியினை எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த மே 4ம் திகதி இடம்பெற்ற முக்கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன், மன்றில் சாட்சியமளித்தார்.
கொலைகள் நடைபெற்ற அன்று தான் பிறிதொரு அறையில் படுத்திருந்ததாகவும், 'எங்களை வெட்டுகின்றான் காப்பாற்றுங்கள்' என்ற அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது தனக்கும் வெட்டு வீழ்ந்ததாகவும், இதனால் தான் சுயநினைவிழந்தமையினால் அதன் பின்னர் நடந்தமை தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
மேலும், தனக்கும் தனஞ்சயனுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும், எனது மனைவி குடும்பத்திற்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தமையினைத் தான் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4 ம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நிர்க்குணானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிர்க்குணானந்தன் சுபாங்கன் (19)  ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்சயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.
இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்சயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்)  மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார்.
ஏற்கெனவே தனஞ்சயனின் மனைவியான தர்மிகா கடந்த 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார். இந்நிலையில் இன்று கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் தனது சாட்சியினைப் பதிவு செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp0.html
வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் சம்பிக்க மீது குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:54.24 PM GMT ]
முஸ்லிம் மற்றும் சிவில் சமூகம் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய தவறான கருத்துகள் அதிர்ச்சியும் கலக்கத்தையும் உண்டாக்குவதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கவுன்சில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை இன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. அக்கடிதத்திலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ம் திகிதி அளுத்கம பிரதேசத்தில் சிங்களத்தினருக்கு எதிராக 3000 முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடந்த தயாராக இருந்தாக அமைச்சர் கூறிய குற்றசாட்டை முஸ்லிம் கவுன்சில் நிராகரித்துள்ளது.
மேலும் அமைச்சர் வெளியிட்ட கருத்துகள் வன்முறையை துண்டுவதாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டமை நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி அரசியல்வாதி இவ்வாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக பேசுவது ஒத்து கொள்ளமுடியது என குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக வெளியிட்டுள்ள கருத்துகள் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் எனவும் முஸ்லிம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp1.html

Geen opmerkingen:

Een reactie posten