தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு

மொஹமட் ராஜிதயாக மாறுவதை விரும்புகிறேன்: அமைச்சர் ராஜித சேனாரத்ன
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:06.47 AM GMT ]
மொஹமட் ராஜிதயாக மாறுவது அல் -கைதா, தலிபான் மற்றும் ஞானசார தேரராக மாறுவததை விட சிறந்தது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தர்கா நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அளுத்கமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் என்னையும் மொஹமட் ராஜித என்று கூறி திட்டியுள்ளனர்.
ஞானசார, அல்-கைதா மற்றும் தலிபான்களை போல் மாறுவதை விட மொஹமட் ராஜிதவாக மாறுவது எனக்கு மிகவும் உகந்தது என்பதுடன் பெறுமதியானது.
இந்த பேச்சுக்கள் குறித்து நான் குழப்பமடைய மாட்டேன். நீங்களும் குழப்பமடைய வேண்டாம். எந்த தரப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அண்மையில் அழிவுகளை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
வன்முறையாளர்களால் சமூகத்தை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க முடியாது. சம்பவத்தில் உடைந்த, பிளவுப்பட்டவைகளை மீள நிர்மாணிக்க முடியும். உடைந்து போன மனங்களை மீள கட்டுவதே சிரமமானது.
முஸ்லிம்கள் எனக்கு வாக்குகளை வழங்கியுள்ளனர். சிங்களவர்களில் பலர் எனக்கு எதிராக வேலை செய்துள்ளனர்.  சிறிய சம்பவத்தினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மூளை இருப்பவர்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnx1.html
மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:22.49 AM GMT ]
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும், மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்திருக்கிறது.
asylum-seekersஇந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக Fairfax ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார்.
நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள படகு பற்றி அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லையென அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnx2.html

Geen opmerkingen:

Een reactie posten