தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று விடுதலை! – 17 பேருக்கும் 4ஆம் திகதிவரை விளக்கமறியல்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 24ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புக்கமைய இவர்கள் 11 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
17 பேருக்கும் 4ஆம் திகதிவரை விளக்கமறியல்.
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் எதிர்வரும் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான மீனவரை விசேடமாக பராமரிக்குமாறும் இதன்போது பணிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 17 பேரும் மன்னார் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்திய மீனவர்கள் 17 பேரும் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகினர். அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய 3 படகுகளையும் தலைமன்னார் கடற்படையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/75008.html
வடக்கில் உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் போராட்டம்
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பணியாற்ற வேண்டிய அட்டவணைப்படுத்தப்படாத – ஊழியர்களின் ஆளணியை ஒழுங்குபடுத்தி, உரிய இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும்படி வற்புறுத்தி வவுனியா நகரசபை ஊழியர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் சுமார் 120 ஊழியர்கள் வரை பங்குபற்றியுள்ளனர்.தொடரும் இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை வட மாகாணம் முழுவதற்கும் விஸ்தரிக்க சங்கம் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/75015.html
வன்முறை முடிந்தாலும் அளுத்கம – பேருவளை மக்கள் பீதியில்
தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தமது பிரதேசத்தின் மக்கள் இல்லை எனவும், அவர்கள் குழுக்களாக வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர். கலவரம் நடந்த போது முஸ்லிம் மக்கள் அதிகமாக இருக்கு பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களுக்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்கள் அதிகமாக இருக்கு பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களும் பாதுகாப்பு வழங்கியதாக அப்பிரதேசங்களில் வாழ்கின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்
கலவரம் நடந்த போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சேதமாக்கப்பட்டுள்ள வீடுகளின் சுவர்களில் பொது பல சேனை அமைப்புக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதை காணலாம். தற்போது இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் மீள் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/75022.html
Geen opmerkingen:
Een reactie posten