தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

நடுக்கடலில் தத்தளித்த படகுடனான தொடர்புகள் துண்டிப்பு: அகதி அமைப்பு கவலை!



வரலாறுகளை தந்த மண்ணில் இன உணர்வோடு என்றும் வாழ வேண்டும்: சிறீதரன் எம்பி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 03:22.57 AM GMT ]
வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் அமரர் திருமதி கெங்காதேவி பாலச்சந்திரன் நினைவாக பெண்களுக்கான மென்பந்து மற்றும் வலைப் பந்தாட்ட போட்டிகளை அண்மையில் நடாத்தியது.
கழுகுகள் விளையாட்டுக்கழக தலைவர் சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்க ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் கம்பர் மலை வித்தியாலய அதிபர் ரவீந்திரன், உடுப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் குமாரு சந்திரமோகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த போட்டிகளில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களை மதிப்பளித்தும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கியும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும்போது,
தமிழினத்துக்கு காலப்பெரும் தலைவனை தந்த இந்த மண்ணில் ஒரு விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்வதை நான் மிகுந்த மதிப்பிற்கு உரியதாக கருதுகிறேன்.
வரலாறுகளை தந்த ஊரில் பிறந்த நீங்களும் அதன் உணர்வுத் தொடர்ச்சியானவர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
எமது மகிழ்வுக்காக விடியலுக்காக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் கனவுகளையும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் மண்ணுள் விதைத்து விட்டு அந்த சமாதிகளின் மேல் இருந்துதான் நாம் பேசுகின்றோம் விளையாடுகின்றோம்.
எல்லாமே. இன்றைக்கு இந்த மண்ணில் தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கம் அரங்கேற்றிய கொடுமைகளுக்கு பிரதிபலனாக சர்வதேசம் விசாரணையை கொண்டு வந்திருக்கின்றது.
இன்றி அதில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் செய்கின்ற பிரயத்தனங்களை பார்க்கின்றீர்கள். இது அவர்களுக்கு சுருக்கு கயிறாகவே மாறும். அண்மையில் முஸ்லிம் சகோதரர்கள் மீது மிககொடுரமான மானுட குலத்துக்கு எதிராக மானுடத்து எதிராக இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இனவாத சக்திகள் அரங்கேற்றியவை வெட்கத்துக்கு உரியவையாக உலகத்தால் பார்க்கப்படுகின்றது.
எனவே ஒரு சர்வாதிகார அரசு எப்படி இருக்குமோ இன்று அதை இலங்கை அரசாங்கம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.இந்த மண்ணில் மக்களை எந்த அடிமைகளாக வைத்திருக்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
யாழ்ப்பாண மண்ணில் இன்று வாள்வெட்டுக்களும், குழு மோதல்களும், கொலைகளும் தற்கொலைகளும் மலிந்திருக்கின்றது. இவை முன்பு இருந்ததில்லை. இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு எமது மண் சீரழிவதற்கு வழி செய்யப்படுகின்றது.
இதில் நாம் விலகியிருக்க வேண்டும். தீய சக்திகளில் இருந்தும் போதை பொருள் பாவனையில் இருந்தும் நாம் விலகியிருக்க வேண்டும்.ஆகவே இத்தகைய சூழலில் இளைய சமுதாயத்தில் இத்தகைய மதிக்கத்தக்க விளையாட்டுக் கழகங்களின் செயற்பாடுகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் சமூக நல்லெண்ண முயற்சிகள் தொடரட்டும். நாமும் அதற்கு துணை இருப்போம் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv3.html

நடுக்கடலில் தத்தளித்த படகுடனான தொடர்புகள் துண்டிப்பு: அகதி அமைப்பு கவலை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 03:48.22 AM GMT ]
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் தத்தளிப்பதாகக் கூறப்படும் அகதிப் படகுடனான தொடர்புகளை இழந்துள்ளதால், அதிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடத்திருக்கும் என்பதை அறிய முடியாமல் போயிருப்பதாக அகதி உரிமைகளுக்காக போராடும் அமைப்பொன்று அறிவித்துள்ளது.
153 பேருடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி புறப்பட்ட படகில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு நேற்று காலை கிறிஸ்மஸ் தீவில் இருந்து 175 கடல் மைல் தூரத்தில் நின்றதாக என்ற Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கசிவின் காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களுக்கு எஞ்சின் வலுவை மாத்திரமே நம்பியிருக்க வேண்டும். எஞ்சின் செயலிழந்து படகு நகர முடியாத பட்சத்தில், அது கவிழக்கூடிய அபாயம் உள்ளதென பேச்சாளர் இயன் ரின்டோல் மேலும் தெரிவித்தார்.
நேற்று மாலை 1.45 அளவில் படகினுடனான செய்மதி தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், படகிற்கு அனர்த்தம் ஏற்பட்டதா என்பதை அறிய முடியவில்லையென அவர் குறிப்பிட்டார்.
இந்தப் படகு பற்றி அவுஸ்திரேலிய சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வெள்ளிக்கிழமை காலை அறிவிக்கப்பட்டதுடன், அவ்வமைப்பு படகை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பால் படகொன்று உள்ளதா என்பதை ஊர்ஜிதப்படுத்த மறுக்கும் அமைச்சர் ஸ்கொட் மொரிசன், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறதா என்பதையும் சொல்லவில்லை.
மெல்பேர்ணில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதலளித்த சமயம், இன்று உங்களுக்கு வழங்கக்கூடிய தகவல் எதுவும் கிடையாதென எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.
பலர் உயிராபத்தை எதிர்கொள்ளும் சமயத்தில், மொரிசன் அசிரத்தையாகவும், அசட்டையாகவும் செயற்படுவது அதிருப்தியளிக்கிறதென ரின்டோல் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv4.html

Geen opmerkingen:

Een reactie posten