[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 07:25.02 AM GMT ]
வெள்ளவத்தை வீடொன்றில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி துன்புறுத்தலுக்குள்ளான நிலையில், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ கிலாதோட்டத்தைச் சேர்ந்த 16வயது சிறுமி கீர்த்திகா, கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணிப் பெண்ணாக சுமார் ஒருவருட காலமாக தொழில் புரிந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 15ம் திகதி வீட்டு எஜமானியால் துன்புறுத்தபட்டு வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கீர்த்திகாவின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெள்ளவத்தை பொலிஸார், வீட்டு எஜமானியை கைது செய்து கல்கிசை நீதவானிடம் ஆஜர்ப்படுத்தியதையடுத்து, வீட்டு எஜமானி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியை கல்கிசை நீதவானிடம் முன்னிலைப்படுத்தி, பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் பெண்களில் 26 வீதமான பெண்கள் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் குழந்தைகளின் போஷாக்கின்மை 40 வீதமாக அதிகரித்துள்ளது. சுத்தமான குடிநீர் 7 வீதமே கிடைத்து வருகிறது எனவும் நந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற சிறுவர்களின் போஷாக்கின்மை தொடர்பில் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தும் கருத்தரங்கொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களில் பலர் காலை உணவை உண்டு வருவதில்லை. இதற்கு பொருளாதார நிலைமைகளும் காரணமாக இருக்கலாம். பெற்றோர் நினைத்தால் பிள்ளைகளை இந்த நிலைமையில் இருந்து மீட்டு எடுக்க முடியும்.
தோட்டங்களை எடுத்து கொண்டால், கோதுமை மா ரொட்டியையே உணவாக உட்கொள்கின்றனர். ரொட்டிக்கு பதிலாக அரிசி சோற்றை உணவாக கொடுப்பது சிறந்தது எனவும் நந்தகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw5.html
சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களை மீட்டுத் தாருங்கள்: கதறும் உறவினர்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 07:30.11 AM GMT ]
கடந்த மே மாதம் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் புக படகுகள் மூலம் சென்று காணமல் போன சிலர் சோமாலியாவில் தற்போது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது அவர்களுடைய உறவினர்களுக்கு சோமாலியா நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகள் வருவதாகவும், எதிர் முனையில் எதையும் கேட்க இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
அழைப்புகள் வந்த எண்கள் 0021-2692298064, 0021-2621297906, 0021-2698010610, 0021-2522132284
அவர்கள் குறித்த தகவல்களை பெற்று அவர்களை மீட்க சோமாலிய நாட்டு தொடர்புடைய நண்பர்களின் உதவி தேவைப்படுவதாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தயவு செய்து சோமாலியாவில் நண்பர்கள் உள்ள அல்லது வணிக தொடர்புள்ள யாரேனும் நண்பர்கள் தொடர்பு கொண்டு அங்கு இருக்கும் உறவுகளை இலங்கைக்கு மீட்டு தரும்படி உறவினர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw6.html
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: பொலிஸ் பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 07:40.55 AM GMT ]
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
சம்பவங்கள் தொடர்பில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர் கைது செய்யப்படவுள்ளனர் எனவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw7.html
Geen opmerkingen:
Een reactie posten