தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

ஐ.நா விசாரணைக் குழுவில் அஸ்மா ஜஹாங்கீர் நியமனத்தால் சங்கடத்தில் இலங்கை….

சிறிலங்காவில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்குவதற்காக நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு மிகவும் வலுவானது என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு அவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “காசா மோதல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு, றிச்சர்ட் கோல்ட்ஸ்ரோன் என்ற ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டது.
ஆனால் சிறிலங்கா குறித்த விசாரணைக் குழு மூன்று நிபுணர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பலம் வாய்ந்தது.
இந்தக் குழு போருக்குப் பின்னரான, சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை கண்காணிக்கும். உள்நாட்டு மீளிணக்கச் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளும். அண்மையில் அளுத்கமவில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் நிபுணர் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.
இந்த வன்முறைகளை நவநீதம்பிள்ளை கண்டித்து, எல்லா மத சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்றும், சிறிலங்காவுக்கு அழைப்பு விடுத்த சில நாட்களின் பின்னர், அவர், இந்த நிபுணர் குழுவில் அஸ்மா ஜஹாங்கீரை உறுப்பினராக நியமித்துள்ளார். இது சிறிலங்காவுக்கு எதிரான, இராஜதந்திர ரீதியான ஆளில்லா விமானத் தாக்குதல் (“diplomatic drone strike against Sri Lanka.”).
சிறலங்காவின் மத சுதந்திரம் தொடர்பாக 2005ம் அண்டில் இஸ்மா ஜஹாங்கீர், ஐ.நாவுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். இதில் அவர், சிறிலங்காவில் மத சகிப்புத்தன்மையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74801.html

Geen opmerkingen:

Een reactie posten