சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும்! சம்பந்தன் MP
“தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு விரைவில் ஏதுமொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனை அடைவதற்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். அதேவேளை, ஐ.நா. மற்றும் அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் இலங்கைத் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி சந்தியப் பிரமாணம் செய்து அடுத்த நாள் அவருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற முதல் பேச்சில் தமிழர்களுடைய பிரச்சினை சம்பந்தமாகப் பேசப்பட்டிருக்கின்றது.
எனவே, தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு விரைவில் ஏதுமொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனை அடைவதற்கு நாம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பதற்குரிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இலங்கை தொடர்பில் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சி சம்பந்தமாக ஒரு தெளிவு எதிர்வரும் வாரங்களில் வெளிப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இலங்கை அரசு பிடிவாதமாக இருக்காமல் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். “ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் இலங்கைத் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எமக்கு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது வடக்கு மாகாண சபையின் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் அங்கு நடக்கும் இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வுகள் காணப்படும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கில் வெல்ல வைத்த தமிழ் மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் குழப்ப முயல்வதே அரசின் நோக்கம் என்றும், இதற்கு நாம் துணைபோகக்கூடாது என்றும் சம்பந்தன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் – முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க அம்மாகாண முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆதரவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தட்டிக்கழித்து விட்டது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தற்போது முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடரவேண்டும் என்றும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழமாக சிந்தித்து முடிவொன்றை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74804.html
வன்முறையில் சேதமாக்கப்பட்ட வீடுகள், கடைகளைத் திருத்தும் பணியில் 700 இராணுவத்தினர்!
முழுமையாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 94 வீடுகள், 137 வியாபார நிலையங்கள் அடையாளங் காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம், திறைசேரி. மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேவேளை மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தீ வைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வை யிட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதேவேளை, சேதமாக்கப்பட்ட வீடுகளை ஒரு மாதகாலத்திற்குள் மீள புனரமைத்து அவர்களை அவ்வீடுகளில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74810.html
ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க எவரையும் அனுமதிக்கமாட்டோம்! ஞானசார தேரர் சூளுரை
சிங்கள மக்களின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான். அவரை விடத் தகுதியானவர் யாரும் தற்போதைக்கு நாட்டில் இல்லை. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வருகின்றனர். அரசியல் ரீதியாக அவரைத் தோற்கடிப்பதற்கு சதிமுயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அளுத்கம சம்பவம் போன்ற கலவரங்களை உருவாக்கி தமது இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது” என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74818.html
பிரபாகரனுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் இன்றும் அஞ்சுகிறார் இராணுவப் பேச்சாளர்
வடக்கிலேயே இன்று அச்சுறுத்தலான சூழல் உள்ளது. சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த வடக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. இராணுவம் மீதான யுத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாததன் காரணத்தினாலேயே நாட்டில் இனக் கலவரங்களை தூண்டுகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/74821.html
Geen opmerkingen:
Een reactie posten