தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

வடக்கில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்கள்!

ஐநா. விசாரணையில் சாட்சியமளிப்பவர்களை அரசாங்கம் தண்டிக்க முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 02:28.05 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அரசாங்கம் கூறுவதைக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திங்களன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், சாட்சியமளிப்பவர்கள் நாட்டின் தேசிய இரகசியங்களை வெளிப்படுத்தினார்கள் எனக் கூறி தண்டிக்க முடியாது என குறிப்பிட்டார்.
அத்துடன் அவர்களைப் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் இரகசியங்களைக் காப்பது, ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்குரிய சத்தியப் பிரமாண அடிப்படையிலான பொறுப்பாகும். அந்தப் பொறுப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடையாது என அவர் கூறியிருக்கிறார்.
சர்வதேச விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியமளிப்பதை அரசாங்கம் தடுக்குமேயானால், அதுவும் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது வலியுறுத்தி கூறியிருக்கிறார். 
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls3.html
பயங்கரவாதமே நாட்டின் பாரிய பிரச்சினை: பீரிஸ்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 02:29.59 PM GMT ]
அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து, சமாதானம் மற்றும் ஸ்திரதன்மையை ஏற்படுத்தியது இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகளுக்கும் நன்மையாகும் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பற்றி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இன்று கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் நாட்டின் பெரிய பிரச்சினையாகும். இதனால் தெற்காசிய நாடுகள் பொருளாதாரத்தையும் நன்மையையும் இழந்து வருகின்றன.
ஆனால், இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்ததால், தற்போது எவ்விதப் பிரச்சனைகளுமின்றி பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls4.html
அனந்தி சசிதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத நபர்கள் நடமாட்டம்! பொலிஸில் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 02:36.53 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத நபர்கள் நடமாடிய விடயம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் அவர் முறைப்பாடு தெரிவித்துள்ளதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் இரவு 8.30மணியளவில் பண்ணாகம் பகுதியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டிற்கு முன்னால் ஹயஸ் வாகனம் ஒன்றில் சில நபர்கள் வந்துள்ளனர்.
ஆனால் குறித்த சமயம் அனந்தி சசிதரன் தனது மகளின் நடனப் போட்டிக்காக இணுவில் பகுதிக்கு சென்றிருந்துள்ளார்.
இந்நிலையில் ஹயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அனந்தி எங்கே? என அயலவர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த பொலிஸார் அவர்களை மறித்து விசாரித்ததை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
பின்னர் அவர்களை பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு பணித்த நிலையில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பொலிஸாரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கொடுத்துள்ளார்.
அதன்போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் திருமதி அனந்தி சசிதரனுடன் தொடர்பு கொண்டு ஊடகங்கள் வினவிய போது மாலை 6 மணிக்குப் பின்னர் தனிப்பட்ட சந்திப்புக்கள் எதனையும் தான் மேற்கொள்வதில்லை,
மேலும் வந்தவர்கள் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தால், என்னை தேடிவந்த விடயத்தை தெரியப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அது நடைபெறவில்லை.
என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக சில நபர்கள் பின்தொடர்வதும், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதுமாக சம்பவங்கள் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls5.html

வடக்கில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்கள்!
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 02:52.23 PM GMT ]
வடமாகாணத்தில் போர் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை படையினரிடம் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்களை ஒட்டிவரும் சம்பவம் நடைபெற்று வருகின்றது.
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் போர் நடைபெற்ற இடங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் முழுமையாக சல்லடையிடப்பட்டதன் பின்னரே மக்கள் அந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கண்டவாறான பல இடங்களில் இன்னமும் இரகசியங்கள் இருப்பதாக கூறி, அங்கெல்லாம் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர்.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சகல பகுதிகளிலும் சாதாரண கிராமங்கள் வரையில் ஊடுருவி இருக்கும் படைப் புலனாய்வாளர்கள் மக்களிடம் அவ்வாறான ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கவும் போவதில்லை என்பதே உன்மையாகும்.
இவற்றைவிட கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் வழங்கிய தகவலினடிப்படையில் இனிமேல் இல்லை என்னும் அளவிற்கு பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படையினர் மீட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆயுதங்களின் விபரங்கள் குறிக்கப்பட்டு அவற்றை வைத்திருந்தால் படையினரிடம் ஒப்படையுங்கள் அவற்றுக்காக பணம் வழங்கப்படும் என பரவலாக துண்டுப் பிரசுரங்கள் கவர்ச்சிகரமாக ஒட்டப்பட்டிருக்கின்றது.
இதன் பொருள் வடமாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றன.
எனவே அவற்றை அரசாங்கம் மிக அமைதியான முறையில் சலுகைகளை வழங்கி மீளப்பெற்றுக் கொள்கின்றது என்பதே. மேலும் நேற்றைய தினம் இலங்கையின் இராணுவத் தளபதி,
ருவான் வணிசூரிய வடமாகாணம் இன்னமும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
துண்டுப்பிரசுரம் ஒட்டப்படுவதும், இராணுவத் தளபதி கூறியிருக்கும் கருத்தும் மக்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றன என காட்டுவதற்கான ஒரு முயற்சியே என மக்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls6.html

Geen opmerkingen:

Een reactie posten