விரிவுரைகளை இடைநிறுத்த தீர்மானம்
பல்கலையில் சமீப காலத்தில் இடம்பெற்ற சில அசம்பாவித்தங்கள் காரணமாகவே இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பல்கலை விரிவுரையாளர்கள் சங்க செயலாளர் ஒலகன்வத்த சந்திரசிறி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலை திங்கட்கிழமை (30) மீளவும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவிருந்த நிலையிலேயே விரிவுரையாளர் சங்கம் இவ்வறிவிப்பை விடுத்துள்ளது.
பல்கலையில் நிலவிய பதற்றமான நிலைமையையடுத்து கடந்த 27ஆம் திகதி முதல் ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் பேரவை வரவேற்பாம்
பாதுகாப்புச் செயலாளரின் தீர்மானமானது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், இந்தத் தீர்மானம் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
சமூக வலையமைப்புக்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது இந்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென முஸ்லிம் பேரவை, பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளது. பேருவளை அலுத்கம சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கூடிய விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74988.html
Geen opmerkingen:
Een reactie posten