தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

இலங்கையின் அடுத்த திடுக்கிடும் தாக்குதல்: புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து உள்ளது !

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள்’ என்று ஐ.நா.வில் 424 வெளிநாட்டு தமிழர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இலங்கை சொத்துக்கள் அரசுடமையாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்கள் யாருமே, இலங்கைக்கு பயணம் செய்ய முடியாது. மற்ற நாடுகளை பொறுத்தவரை, பட்டியலில் உள்ள சிலருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சிலர், இரு ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கடைசியாக எங்கிருந்து புறப்பட்டார்களோ அந்த இடத்துக்கே (ட்ரான்சிட் பாயின்ட்) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில்தான், இந்த 424 பேரும் ‘சர்வதேச பயணத்தடை பட்டியலுக்குள்’ உள்ளடக்கப்படலாம் என்பதற்கான சாத்தியம் தெரியவந்துள்ளது.இந்த ‘சர்வதேச பயணத்தடை பட்டியல்’, தீவிரவாதிகள் விமானப் பயணம் செய்வதை தடுப்பதற்காக அமெரிக்காவால் மெயின்டெயின் செய்யப்படும் ஒரு பட்டியல். வட அமெரிக்காவுக்கு வெளியேயும், உலகில் உள்ள பெரிய விமான நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களுடனும் லிங்க் பண்ணப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை அடையாளம்காணும் மையம் அல்லது TSC (Terrorist Screening Center) என்ற அமெரிக்க அரசு அமைப்பால் மெயின்டெயின் செய்யப்படும் இந்த பட்டியலில், ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர்கள் உள்ளன. அந்தப் பெயர்கள் உள்ள நபர்கள் விமானங்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால், சிக்கல்தான்.
இந்த பட்டியல் அடங்கிய டேட்டா பேஸ், விமான நிறுவனங்களில் CRS எனப்படும் ரிசர்வேஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்படவில்லை. ஆனால், விமான நிறுவனங்களின் ஏர்போர்ட் ஆபரேஷனில் உபயோகிக்கப்படும் DCS சிஸ்டத்துடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், பட்டியலில் உள்ளவர் விமானதடதுக்கு டிக்கெட் எடுக்கும்போது, எந்த தடையும் ஏற்படாது. ஆனால், பயணம் செய்யும் தேதியில் போர்டிங் பாஸ் பெறுவதற்காக செக்-இன் செய்யும்போது DCS சிஸ்டத்தில் உள்ள லிங்க் குறுக்கிடும். போர்டிங் பாஸ் இஷ்யூ ஆகாது.
பட்டியலில் உள்ள பெயருடைய பயணியை செக்-இன் செய்ய முயலும்போது, விமான நிறுவன கம்ப்யூட்டர் திரையில் “தடை செய்யப்பட்ட நபர்” என்ற வாசகம் விமான நிறுவன பணியாளருக்கு தெரியும். அத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி TSC-ன் சென்ட்ரலைஸ்ட் தொலைபேசி இலக்கம் ஒன்றும் காண்பிக்கப்படும். அந்த இலக்கத்தை விமான நிறுவன பணியாளர் அழைத்து, குறிப்பிட்ட நபர் பயணம் செய்வதற்காக வந்துள்ளார் என தெரிவித்துவிடுவார். அதன்பின் தொடங்கும் பெரிய இழுபறி. இலங்கை அரசு வெளியிட்டுள்ள தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் இந்த பட்டியல்வரை எப்படி போகும்? எப்படியென்றால், இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை TSC பல விதங்களில் பெறுகிறார்கள். சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ., என்.எஸ்.ஏ. உட்பட அமெரிக்க உளவுத்துறைகள் சிலரது பெயர்களை கொடுக்கின்றன.
அவற்றைவிட ஆட்டோமேட்டிக்காக வேறு சில பட்டியல்களில் இருந்தும் பயங்கரவாத சந்தேக நபர்களின் பெயர்களை TSC டேட்டா பேஸ் டவுன்லோடு செய்து கொள்கிறது. இந்த ‘வேறு சில பட்டியல்கள்’ என்பது, சர்வதேச பாதுகாப்பு ஏஜென்சிகள் மெயின்டெயின் செய்யும் பட்டியல்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்கள் என இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 424 தனி நபர்கள் அடங்கிய பட்டியல், ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1373-ன் கீழ் பதிவு செய்தபின்னரே வெளியிடப்பட்டது. இதனால் பட்டியலில் உள்ள பெயர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் டேட்டா பேஸில் பதிவாகியுள்ளன. இந்த ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1373, இலங்கையர்களுக்கு மட்டும் என்றில்லை. பல்வேறு நாட்டு அரசுகள் கொடுத்த பதிவுகளில் உள்ள பெயர்களும் உள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1267 (1999), 1333 (2000), 1390 (2002), 1455 (2003), 1526 (2004), 1617 (2005), 1735 (2006), 1822 (2008), 1904 (2009), 1989 (2011) 2083 (2012) ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல்களை TSC மெயின்டெயின் செய்யும் சர்வதேச பயணத்தடை பட்டியல் ஆட்டோமேட்டிக் ஆக டவுன்லோடு செய்து இணைத்துக் கொண்டுள்ளது. இதுவரை ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1373-ன் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இந்த ஆட்டோமேட்டிக் டவுன்லோடில் இல்லை. ஆனால் TSC, ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் தமது பட்டியலில் புதிதாக யாரை இணைப்பது என்பதை ரிவைஸ் செய்கிறது. வரும் செப்டெம்பரில் TSC, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதம் தொடர்பான வெவ்வேறு சட்டப்பிரிவுகள் அனைத்திலும் உள்ள சகல பெயர்களையும் இணைத்துக் கொள்வது என முடிவு செய்திருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.
அப்படி நடந்துவிட்டால், ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1373-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட 424 தமிழர்களின் பெயர்களும், சர்வதேச பயணத்தடை பட்டியலில் போய் சேரும். இதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/298.html

Geen opmerkingen:

Een reactie posten