இன்று மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த குழுக்களில் எவர் முன்பாக இருக்கின்ற திடலை பாவிப்பது என்ற விடையத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கல் வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றன. அத்துடன் குழுவினரால் இஸ்தாபிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. உடனடியாக இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும் பிரசைகள் குழுவினரும் குழுக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என எமது நிருபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரை தொடர்பு கொண்ட போது, அதன் சார்பில் எமக்கு பதிலளித்த சகோ. ரஸ்மின் அவர்கள். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை காரியாலயம் மீது இன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து குர்ஆன், சுன்னாவுக்கு எதிரான ஒரு குழு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் கிளைக் காரியாலயத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காரியாலயத்தை தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன், குறிப்பிட்ட இடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமானது என மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/75103.html
Geen opmerkingen:
Een reactie posten