[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 12:19.42 AM GMT ]
வடமத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் நான் அனுராதபுரத்தில் இருக்கவேயில்லை.
இது போலியான குற்றச்சாட்டு சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின்னர் களுபோவில பிரதேசத்தில் வைத்து என்னை கைது செய்தனர். கைது செய்தவர்கள் பொலிஸ் சீருடையில் இருக்கவில்லை.
பின்னர் வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று ஒன்பது நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைத்து என்னைக் கடுமையாக தாக்கினர். பணம் கொடுத்தால் விடுதலை செய்வதாகத் தெரிவித்தனர்.
பாரியளவில் பணம் வழங்குமாறு அவர்கள் என்னிடம் கோரினார்கள். ஆரம்பத்தில் இவர்களை ஓர் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கருதினேன். பணம் இல்லையென்று சொன்னேன். அப்படியென்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என அவர்கள் எச்சரித்தனர் என சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு என்றால் குறித்த காலப்பகுதியில் வங்கிக் கணக்கிற்கு எவ்வாறு பாரியளவில் பணம் கிடைத்தது என சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் போது, வாசனைத் திரவிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் பாரியளவும் பணம் தமது வங்கிக் கணக்கிற்கு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் தாக்கவில்லை பலவந்தமாக கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என எதிர்த்தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணை அனுராதபுர நீதிமன்றில் நடைபெற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblpy.html
ஐநா விசாரணைக்கு நேரடி பங்களிப்பு அளிப்பது 'சாத்தியமில்லை!- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 12:30.23 AM GMT ] [ பி.பி.சி ]
போர்க்காலத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ள வல்லுநர் குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவை அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த விசாரணைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பங்களிப்பு வழங்குமா என்று கேட்டபோது, மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவிக்கையில்,
எங்களால் நேரடி பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலைமை இல்லை. நாங்கள் தேசிய மட்டத்தில் தான் பணியாற்ற முடியும். எனவே எங்களின் நேரடி பங்களிப்பு இந்த விடயத்தில் இருக்கும் என்று தெரியவில்லை என்றார் மனித உரிமைகள் ஆணையாளர்.
20 பேர் ஐநா குழுவுக்கு சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக தகவல்
ஐநாவால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் இலங்கைக்கு வெளியில் இருந்துகொண்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் இலங்கையிலுள்ள மக்களிடம் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு அங்கிருக்கிறதா என்று கேட்டபோது அவர் கூறியதாவது,
20 பேர் அல்லது 20 அமைப்புகள் சாட்சியமளிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்ததை நாங்கள் அவதானித்துள்ளோம். தேசிய மட்டத்தில் இவர்களிடமிருந்து தகவல்களை பெறுவது எந்தளவுக்கு சாத்தியப்படும். முறையான விசாரணை ஒன்று நடக்குமானால், இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகத் தான் பணியாற்ற முடியும் என்றார் மஹநாமஹேவா.
ஐநா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளது.
அந்த விசாரணைகளுக்கு தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அளுத்கம விவகாரம் பற்றி விசாரணை
இதனிடையே, தென்னிலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றது.
இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்குமான பரிந்துரைகளை இந்த விசாரணைகளின் முடிவில் தாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தமிழோசையிடம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblpz.html
Geen opmerkingen:
Een reactie posten