தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

நாட்டின் புலனாய்வாளர்களை காட்டிக்கொடுப்பது அரச துரோகம்: எல்லாவள மேதானந்த தேரர்!!

பண்டைய காலங்களிலும் புலனாய்வுப் பிரிவுகளை காட்டிக்கொடுத்த இனத்துரோகிகள் இருந்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இப்படியான காட்டிக்கொடுப்பு காரணமாக புலனாய்வு அதிகாரிகளுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்தால், அவர்களின் பெயர்களை வெளியிட்டவர்கள் அதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும்.
அரச பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பாகும். நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரை தவிர அதனுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவும் உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் புலனாய்வு பிரிவு என்பது உலகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது.
இலங்கையில் பண்டைய காலங்களில் புலனாய்வுப் பிரிவுகள் இருந்தாக வரலாற்று குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அதில் யார் இருந்தனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையவர்கள் பற்றி வெளியார் அறிந்து கொள்வது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக அமைந்து விடக் கூடும்.
1848 ஆம் ஆண்டு அப்புலா என்பவரின் போராட்டம் குறித்த தகவல்களை தரம்பவெவே என்பவர் ஆங்கிலேயருக்கு வழங்கினார். இந்த காட்டிக்கொடுப்பால் முழு போராட்டமும் பாதிக்கப்பட்டதுடன் பலரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டன எனவும் எல்லாவள மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw4.html

Geen opmerkingen:

Een reactie posten