பாகிஸ்தானியருக்கான வருகை தரு வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:28.53 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த முடிவு தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று நேடியாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரும் பாகிஸ்தான் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வருகை தரு வீசாக்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரஜைகள் இனி வரும் காலங்களில் அந்நாட்டில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களை சமர்பித்து வீசாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmoz.html
நவநீதம்பிள்ளையின் நிபுணர்கள் குழு அரசுக்கு எதிரான இராஜதந்திர ஆளில்லா விமான தாக்குதல்!- தயான் ஜயதிலக்க
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:50.33 PM GMT ]
அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத கலவரங்களும் இந்த குழுவின் விசாரணைகளுக்கு பரிந்துரைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் இடம்பெற்ற மறுதினம் சம்பவங்களுக்கு கண்டனம் வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை, கொழும்பு அரசாங்கம் அனைத்து சிறுபான்மை மதத்தினரை பாதுகாக்க வேண்டும் அழைப்பு விடுத்திருந்துடன் அஸ்மா ஜஹாங்கீரை நிபுணர்கள் குழுவின் உறுப்பினராக நியமித்திருந்தாக ஜயலதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்ற மோதல்களில் இடம்பெற்ற மீறல்களை கண்டறிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்டுமே நியமித்திருந்தது.
எனினும் இலங்கை மீதான விசாரணைகளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நியமித்துள்ளது. இந்த குழு மிகவும் வலுவானதும் கனத்தை எடையையும் கொண்டது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
12 உறுப்பினர்களை கொண்ட ஐ.நாவின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது விசாரணை அறிக்கையை கையளிக்க வேண்டும் என்பதுடன் இலங்கை அரசங்கத்தின் ஒத்துழைப்புகளை பொருட்படுத்தாமல் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo0.html
பாதுகாப்புப் பிரச்சினை: வெளியில் தொழுவதை நிறுத்துமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:43.33 PM GMT ]
முஸ்லிம் மக்கள் தொழுகையின்போது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று தொழுவதை இயன்றளவு தவிர்த்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினையினையடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே தொழும் சகல முஸ்லிம்களும் உள்ளே சென்று தமக்குரிய இடங்களை இயன்றளவு ஒதுக்கிக்கொண்டு தொழுது கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo1.html
Geen opmerkingen:
Een reactie posten