[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:49.48 AM GMT ]
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜாக்கப் சூமா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவது குறித்த தனது ஆர்வத்தை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் ரமபோசாவை இந்த பணிகளுக்காக நியமித்திருந்தார். ரமபோசாவுடன் இலங்கை வரவுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை வரும் ரமபோசா அரச உயர் மட்டத்தினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx2.html
ஐ.நா. விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்!- முன்னாள் இராஜதந்திரிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 11:12.06 AM GMT ]
சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இலங்கையின் உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் நவிபிள்ளையின் விசாரணைக்குழு தயாராகியுள்ள நிலையில், அவ்விசாரணைக் குழுவில் சாட்சியமளிக்கவுள்ள சாட்சியங்களை பாதுகாக்க முடியாத நிலை இலங்கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே சிவில் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் இதனைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பில் முன்னாள் இராஜதந்திரியும், ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஜயந்த தனபால கூறுகையில்; ஐ.நா.விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருக்கிறது. 2006ஆம் ஆண்டு சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக அரசாங்கம் கொண்டுவருவதாக கூறியது. தொடர்ந்து அமைச்சரவையில் இதுபற்றி பேசினார்கள். ஆனால், அதன்பின்னர் எவ்வித பேச்சுக்களும் இல்லை.
சாட்சியமளிப்பவர் தண்டனைக்குட்பட்டாலோ அல்லது சித்திரவதைக்குட்படுத்தப்பட்டாலோ அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கவேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. எனவே, அரசாங்கம் சாட்சியங்களை பாதுகாக்க விஷேட நடைமுறை ஒன்றை அமுல்படுத்த வேண்டும். அமெரிக்காவில் சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் நடைமுறையிலுள்ளது. மேலும் ஐ.நா.வின் விசாரணைக்கு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை உத்தியோகபூர்வமாக இதுவரை மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் கூறினார்.
சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பில் ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் இராஜதந்திரியுமான பேராசிரியர் தயான் ஜயதிலக கூறியதாவது; சாட்சியங்களை பாதுகாக்கவும் ஐ.நா. விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பிலும் உயர் நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும்.
2006 ஆம் ஆண்டு சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டம் தொடர்பாக பேசப்பட்டது. அது திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் சாட்சியமளிப்பவர்களுக்கானது. ஆனாலும், அதுவும் இன்று இல்லை. எனவே, இன்று நடக்கவுள்ள ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கவுள்ளவர்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்த தரப்பினராவது முன்வந்து சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர வேண்டும். ஐ.நா. விசாரணை வலுப்பெற்ற ஒன்று. விசாரணை ஆரம்பமாகவுள்ளதற்கு முதலே சாட்சியங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பில் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி பாக்கியசோதி கூறுகையில்,
ஐ.நா. விசாரணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ள சாட்சியாளர்களை பாதுகாக்க இலங்கையில் எவ்வித சட்டங்களும் இல்லை. உள்நாட்டில் சாட்சியங்களை திரட்டுவதே ஐ.நா. விசாரணைக்குழுவின் பிரதான பணியாக இருக்கும் நிலையில், சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. தனிநபர் மட்டுமன்றி, ஏனைய சாட்சியங்களை பாதுகாப்பதும் கடினமான விடயமே என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு வழங்க சாட்சியங்களை சேகரிப்பதாக ஏற்கனவே கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமும் சாட்சியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx4.html
த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 12:20.32 PM GMT ]
இன்று காலை 8.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் கந்தரோடையைச் சோந்த முத்துலிங்கம் நவலோகராஜா என்ற உறுப்பினரே உள்ளாகியுள்ளார்.
பிரதேச சபையின் சாரதியே சுன்னாகம் பஸ் நிலையப் பகுதயில் வைத்து இவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சாரதி பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகத்தின் திருத்தப் பணி வேலையைத் தவறான தகவலை வழங்கி பெற்றுள்ளதாகவும் பெற்ற வேலையைக் கூட உரிய முறையில் செய்யவில்லையெனக் கூறப்படுகிறது.
இதனால், சபையில் நேற்றுமுன்தினம் பெற்ற கூட்டத்தில் இது சம்பந்தமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் கொண்டுவர குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர் காரணமாக இருந்துள்ளார் என்பதற்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx5.html
போர் வெற்றியைப் போன்று சர்வதேசத்தை வெல்ல முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 12:54.18 PM GMT ]
மாந்தை மேற்கு பிரதேச சபையினால் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. அந்த நிதியை இந்த அரசாங்கத்தினால் இலங்கைக்குள் நிரந்தர அரசியல் தீர்வை காணாமல் எங்கிருந்தும் பெற முடியாது.
ஆனால் போரை வெற்றி கொண்டது போல சர்வதேச சமுகத்தையும் வெற்றி கொண்டுவிட முடியும் என்று இந்த அரசு தப்பு கணக்கு போடுகின்றது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காணாத வரைக்கும் சர்வதேச சமூகத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதே உண்மை நிலையாகும்.
ஜெனிவா தீர்மானத்துக்கு பின்னர் சர்வதேச சமூகம், அரசாங்கத்தால் இறுதிக் கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை விசாரணை செய்வதற்கென நிபுணர்களை அனுப்பி, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதற்கு முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய தாங்கள் சரியாக பயன்படுத்தி தீர்வை பெற்றுத்தருவதற்கும், அதனோடு இணைந்த அபிவிருத்திக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்களுடைய பங்களிப்பும் அதற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இறுதிக்கட்ட போரில் மாந்தை மேற்கு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்து மீண்டும் மீளக்குடியேறியுள்ளனர்.
இந்தநிலையில், பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாகவும், வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, பாதைகள் சீரின்மை, மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இன்மை, வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் முறைகேடுகள், இலஞ்சம் கோரப்படுகின்றமை, வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணலுக்கு அதி கூடிய விலை வசூலிக்கப்படுகின்றமை மற்றும் காணிகள் அபகரிப்பு என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாந்தை மேற்கு பிரதேச உதவி அரசாங்க அதிபர், அரச மற்றும் தனியார் காணிகளை யார் யாரையோ திருப்திபடுத்துவதற்காக முறையற்ற ரீதியில் சுவீகரித்து வரும் அதேவேளை, வன்னி மாவட்ட அமைச்சர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு மணல் கிரவல் கருங்கற்கள் மரங்கள் போன்ற வளங்களை கொள்ளையடித்து சட்டவிரோதமான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, அவற்றை கட்டுப்பாடற்ற விலையிலும் தரகர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும், அவரது இந்த மோசடி வியாபாரத்தால் பொதுமக்கள் தமது வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணலுக்கு (உழவு இயந்திர பெட்டி ஒன்றுக்கு 2,000 ரூபா செலவழிக்க வேண்டிய இடத்தில்) 4,500 ரூபா செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போரினால் மோசமாக பாதிக்கப்பட்டு மீளக்குடியேறியுள்ள மக்களை மேலும் பொருளாதார ரீதியாக நலிவுறச்செய்யும், அழுத்தி பாரம் சுமக்க வைக்கும் மாந்தை மேற்கு பிரதேச உதவி அரசாங்க அதிபர் தொடர்பாக பல முறைப்பாடுகள் தம்மால் நாடாளுமன்றத்திலும், அமைச்சுக்கும் தெரியப்படுத்தியும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx6.html
Geen opmerkingen:
Een reactie posten