தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

அளுத்கம, பேருவளை தாக்குதல்: ஓட்டமாவடி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

தீவிரவாதிகளை தடுக்க அனைத்து இந்தியாவின் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து செயற்பட முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 05:15.19 AM GMT ]
இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக தொடர்ந்தும் கரையோர பாதுகாப்பை பலப்படுத்துது என்று இந்தியா தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கரையோர பாதுகாப்பு பிரிவினர், கியூ பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், கரையோர காவல்துறையினர்,  வனத்துறையினர் உட்பட்ட பல அதிகாரிகளும் பங்குபற்றினர்.
இதன்போது இலங்கைக்கு ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்களை தடுப்பதற்காக தீவிரமான கண்காணிப்புகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியாவி;ன சகல பாதுகாப்பு பிரிவுகள் மத்தியிலும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது என்று இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி தனுஸ்கோடியில் உள்ள பாலம் என்ற இடத்தில் நான்கு பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு தீhமானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை அரிச்சல்முனை பகுதியில் கடந்த சில நாட்களில் மாத்திரம் கடத்தல்கள் தொடர்பில் 15 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv7.html
முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிளவு?.
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 05:54.13 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்களப் இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஆளும் கட்சியில் தொடர்ந்தும் இணைந்திருக்க முடியாது என சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டிருப்பதன் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என சிலர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதனை அறிந்து கொண்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், சில உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw1.html
அளுத்கம, பேருவளை தாக்குதல்: ஓட்டமாவடி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 06:24.06 AM GMT ]
அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை ஆகிய பிரதேசங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இடம்பெற்றுவரும் பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்புத் தாக்குதல்களை, கண்டித்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளது 39வது பொதுச் சபைக் கூட்டத்தில் கண்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை உள்ளிட்ட பிரதேசங்கள் உட்பட இலங்கையின் அதிகமான பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்குடன் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் தீயிடப்படுகின்றமை போன்ற பேரினவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்த கண்டனப் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது இக்கண்டனப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அனைத்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது கண்டன உரையினையும் நிகழ்த்திருந்தனர்.
இவ்வாறான கண்டிக்கத்தக்க செயற்பாடுகள் பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவினால் திட்டமிட்டு மக்களுக்கெதிராக முடக்கி விடப்பட்டு வருகின்ற போதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சாதகமாகக் குற்றம் சுமத்துகின்றமையும் கண்டன உரைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
சபையில் அனைத்து உறுப்பினர்களது ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்ட மேற்படி கண்டனத் தீர்மானமானது, நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தல் என சபையில் ஏகமனதாகக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmw3.html

Geen opmerkingen:

Een reactie posten