தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

1 வது ஆபரேஷன் 1 நாளில் விழுந்த ஹெலி !

ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரால் கைப்பற்றப்பட்ட நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராணுவம், மற்றொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த நகரத்தில் துருப்புக்களை கொண்டு போய் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று, தீவிரவாத இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சதாம் ஹூசேனின் சொந்த இடமான திக்ரித் நகரில் இந்த சம்பவம் நடந்தது. இந்த நகரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரால் கைப்பற்றப்பட்டது.
தற்போது தலைநகர் பாக்தாத்தில் வந்து இறங்கியுள்ள அமெரிக்க ராணுவ திட்டமிடலாளர்கள், வடக்கு ஈராக்கில் உள்ள முக்கிய நகரங்கள் சிலவற்றை ராணுவம் மீண்டும் கைப்பற்ற வேண்டியது அவசியம் என ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, அமெரிக்க ராணுவ திட்டமிடலாளர்கள் கொடுத்த திட்டத்தின் அடிப்படையில், முதலாவது நகரத்தை மீண்டும் கைப்பற்றும் ஆபரேஷன் நேற்று முதல் தொடங்கியது. தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கேயுள்ள திக்ரித் நகரம், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரத்தின் மேலாக பறந்த உளவு விமானங்கள் எடுத்த வீடியோக்களில் இருந்து, தீவிரவாத இயக்கத்தினரின் கன்ட்ரோல் சென்டர், மற்றும் பெரிய முகாம் அமைந்துள்ள இடம் எது என்பதை தெரிந்து கொண்டது சி.ஐ.ஏ.
அந்த இடம், எது தெரியுமா? அங்குள்ள யூனிவர்சிட்டி வளாகம்! திக்ரித் நகரத்தை கைப்பற்றிய தீவிரவாத இயக்கம், யூனிவர்சிட்டி வளாகத்தில் இருந்தே நகரம் முழுவதையும் கன்ட்ரோல் செய்கிறது என தெரியவந்ததை அடுத்து, அதற்கு அருகே இருந்த ஸ்டேடியம் ஒன்றை ஈராக்கி ராணுவம் கைப்பற்றினால், அங்கிருந்து நகர்ந்து தாக்குதல் நடத்துவது சுலபம் என திட்டமிட்டு கொடுத்தார்கள், அமெரிக்க ராணுவ திட்டமிடலாளர்கள். இதையடுத்து நேற்று மாலை முதல் ராணுவ ஹெலிகாப்டர்களில் துருப்புக்கள் கொண்டு செல்லப்பட்டு, ஸ்டேடியத்தில் இறக்கப்பட்டார்கள். ஸ்டேடியத்தை நோக்கி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதலை நடத்த தொடங்கினர். அத்துடன் துருப்புக்களை கொண்டுவந்து இறக்கும் ஹெலிகாப்டர்களையும் தரையில் இருந்து சுட தொடங்கினர்.
இந்த தாக்குதலின்போது, துருப்புக்களை ஸ்டேடியத்தில் இறக்கும் ஹெலிகாப்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அருகே பறந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ திட்டமிடலாளர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் முதலாவது ஆபரேஷனில், முதலாவது தினத்திலேயே ஒரு ஹெலிகாப்டரை இழந்துள்ளது ஈராக்கிய ராணுவம் (ஹெலிகாப்டர் அமெரிக்கா அன்பளிப்பாக கொடுத்ததுதான்!)
http://www.athirvu.com/newsdetail/297.html

Geen opmerkingen:

Een reactie posten