குறிப்பிட்ட தயாரின் பெயர் ; Erin Gray எனவும், அவரது பிள்ளைகளான 11 வயதுடைய Rachel Kaya Beckles என்பவரும், 5 வயதுடைய Robert Clark என்பவரும் அவருடன் வசித்துவந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grayனின் சகோதரியாகிய Ashley என்பவர் தான் அவர்களை கடைசியாக யூன் மாதம் 22ம் திகதி பார்ததாகத் தெரிவித்திருக்கின்றார். அன்றைய தினம் தனது வீட்டிற்கு வந்து தோய்த்த ஆடைகளை அவசரமாக எடுத்துச் சென்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்
Gray யினது தாயாரான ஜக்கி தமக்கு அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை, ஆனால் எங்கோ சென்றுவிட்டார்கள் எனக் கூறியிருக்கின்றார் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன் ஜக்கி தான் தனது மகளைக் கண்டபோது அவர் சாதாரணமாகவே காணப்பட்டார் எனவும் எதுவும் வித்தியாசமானதாகக் அவர் காணப்படவில்லையெனப் பொலிசாரிடம் தெரிவித்திருக்கின்றார். ஜக்கி அவரைக் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிருக்கின்றார் எனத் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் ஜக்கி தன்னிடம் Gray தன்னை யாரோ பின்தொடர்வதாகப் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார் எனவும் தான் அதைப் பெரிய விடையமாகக் கருதவில்லையெனவும் தெரிவித்திருக்கின்றார்.
Gray யின் குடும்ப அங்கத்வர்கள் Grayக்கு மனரீதியான நோய் எதுவும் இல்லையெனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஜக்கி தனது மகள்காகிய Gray யின் வீட்டிற்கு சென்றபோது அவர்களது வீடு ஒழுங்கீனமாக இருந்தது தெரியவந்திருக்கின்றது. அத்தோடு ஆனால் ஆடைகள் closet ற்குள் காணப்படவில்லை, அவர்களது காரும் காணப்படவில்லை என்பது தெரியவந்திருக்கின்றது.
தற்போது இவர்களைக் கண்டுபிடிப்பதற்காகப் பொலிசார் பொதுமக்களின் ஆதரவை நாடியிருக்கின்றார்கள்.policemissing